Pages

Sunday, January 22, 2012

ஒரு முறை .. ஒரே ஒரு முறை .. [Part 1]

இடம் : நந்தாவின் அறை
நாள்: செப்டம்பர் 3, 2011

பல நாள் யோசனைக்கு பிறகு தான் அவன் இந்த முடிவுக்கு வந்தான். இந்த அறை அவனின் நவரசங்களையும் பார்த்திருக்கிறது கடந்த 
3 ஆண்டுகளாக. இன்று அதே அறை ஒரு மிகப்பெரும்  சம்பவத்தை காணவும் தயராகிக்கொண்டிருக்கிறது. அறையின் மூலையில் ஒரு டேபிள், அதில் அவன் லேப்டாப். அதன் அருகிலேயேதான் இரண்டு பாட்டில்கள். அதில் ஒரு பாட்டில் அவனுக்கு மிகவும் பிடித்த 'Whyte & Mackay'. இன்னொன்று.....

இந்த மூன்று  வருடங்களாக அவன் மட்டுமே அந்த அறையில் வசித்து வருகிறான். சில சமயம் நண்பர்கள் பார்ட்டி இவன் அறையில் அரங்கேறும். தனி அறை, அதுவும் ஐந்தாவது மாடி என்னும் போது யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்... அவன் அறையின் ஜன்னலை திறந்து வைத்தால் வெறும் சோடிய வெளிச்சமே தெரியும். ஆம் அருகில் எந்த உயர்ந்த கட்டிடமும் இல்லை, அதனாலேயே இவனுக்கு இந்த அறை பிடித்திருந்தது. தனிமையில் இரவில் காற்று  சுழன்றடிக்க எதுவுமே தெரியாமல் உறங்கியிருக்கிறான், போதையில். இன்றும், கடைசி முறையாக தயாரகிக்கொண்டிருந்தான்...

அவன் அறையில் இருந்த பாட்டிலில் இன்னொன்று, அவனுடைய சிறு வயதில் அவர்கள் வயக்காட்டில் இருந்த பருத்தி செடிக்கு அடிக்கும் மருந்துதான். அதன் பெயரும் மனமும் அவனுக்கு மிகவும் பரிச்சயம். அதன் குணம், பூச்சி கொல்லி மட்டும் அல்ல, அவர்கள் வயலில்  வேலை செய்த மாரியம்மாளின் மகளின் உயிரையும் சேர்த்தே கொன்றது அது. அது இந்த மாநகரில் கிடைக்காது என்று தெரியும் அவனுக்கு. அதனாலேதான் கடைசியாய் ஊருலிருந்து வரும்பொழுது, அதுவும் அவனுடனே பயணித்தது. இப்பொழுது அவன் முன்னே, எமனாய் ....

ஒரு மூடியோ இரண்டு மூடியோ குடித்தால் வேலைக்கு ஆகாது, பாட்டில் முழுவதுமாய் குடிக்கவேண்டும்.அதனாலதான் அவனுக்கு இன்னொரு துணை பாட்டில் தேவைப்பட்டது.எல்லாம் தயார் இப்போ, மனசுல இருந்ததெல்லாம் கொட்டி ஒரு லெட்டர் கூட எழுதியாச்சு. இல்ல ... கடைசியா ஒரு வரி சேர்க்க ஆசைப்பட்டான், கடைசி ஆசையோ என எண்ணிக்கொண்டே அதை எழுதி முடித்தான் :

"சாவதற்கு தைரியம் தேவையில்லை, நிகழ்கால வெறுப்பும் எதிர்கால பயமும் போதும்."

[தொடரும்...]

No comments:

Post a Comment