Pages

Friday, July 27, 2012

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...
"ஹலோ பூரி இருக்காங்களா "
"இல்லையே "
"இல்லையா ... "
"டீ சாப்ட போயிருக்காங்க "
"ஒ... சரி சரி .. நீங்க..."
"நான் மசால் தோசை "
"எப்ப வருவாங்க"
"இன்னும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கால் பண்ணுங்க"
"சரிங்க"
"நீங்க யாரு பேசறது... "
"நான் கார வடை ..."
"சரிங்க.... வந்தா நான் சொல்றேன்..."

*******

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...
"ஹலோ கார வடையா "
"ஆமாங்க"
"நான்தான் பூரி பேசுறேன்"
"நீங்க ஸ்ட்ரைக் பண்ணனும்...  நாங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்ண போறோம்..."
"என்னது  ..."
"ஆமாங்க, உங்களாலதான் எங்களுக்கு பிரச்சனையே "
"எங்களால உங்களுக்கு என்ன பிரச்சனை?"
"உங்கள பொறிச்ச எண்ணைலதான் எங்களையும் பொறிக்கறாங்க.. அது எங்களுக்கு புடிக்கல.. நாங்க ரொம்ப கருப்பாகிடுறோம் ...."
"போங்கடா லூசுங்களா "
..... டொப் .....
"என்னாச்சு பூரி "
"பாருங்க மசால் தோசை அண்ணே ... இந்த கார வடைங்க எங்கள ஸ்ட்ரைக் பண்ண கூப்புடுறாங்க... "
"எதுக்கு ?"
"எதோ, எங்கள பொறிச்ச எண்ணைல அவங்களையும்  பொறிக்கறாங்களாம் , அது புடிக்கலயாம் அதான் ஸ்ட்ரைக் பண்ண போறாங்களாம்"
"அட பாவிங்களா  , அப்படி பாத்தா , வடை சுட்ட  எண்ணைலதான் எங்களையே வேக வெக்கறாங்க.. நாங்க எங்க போறது ..."

*******

"காரவடை தோழர்களே .... பூரி நமது போராட்டத்திற்கு  ஒத்துழைப்பு தரவில்லை.. ஆனாலும் நாம் நமது போராட்டத்தை  துவக்குவோம் ...
இனி பூரி பொறித்த  எண்ணையில்  நம்மை பொறித்தால் நாம் வேகக்கூடாது ... எவ்வளவு  சூடக்கினாலும் நாம் தளரக்கூடாது ...."

*******

"ஐயா ... பருப்பு சரி இல்லைன்னு நெனைக்கறேன் வடை வேகவே மாட்டேங்குது..."
"அதெப்புடி... அதே பருப்புதாண்டா ..."
"எண்ணைல ஏதாவது பிரச்சனையா இருக்கும் ... விடு வேற எண்ணைல  போட்டுக்கலாம்... இப்போதைக்கு அரை வேக்காட்டுலையே எடுத்துடு ... கஸ்டமர் எல்லாம் வர்ற நேரம் ஆகிடுச்சு ..."

*******

"காரவடை தோழர்களே.... நமது போராட்டம் வெற்றி பெரும் தருணத்தை எட்டி விட்டது ...."
*******

"டேய் நேத்து வடை வேகலைன்னு சொன்னியே.... இந்தா... இது பக்கத்து கடைல மீன் பொறிச்ச எண்ணை ... இதுல நல்ல வேகுமாம் ... சீப்பா வாங்கியாந்துட்டேன்..."

*******

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங்...
"ஹலோ மீன்  இருக்கான்களா ...."

  -- முற்றும் --


 நீதி : எண்ணெய் உணவுகளை தரமான கடைகளில் வாங்கிடுங்கள்.

Thursday, July 12, 2012

அலோ

"ஹலோ "
"..."
"எங்க இருக்கீங்க "
"..."
"புரியல ஒரே சத்தமா இருக்கு "
"..."
"என்னது வேலூர் கிட்டயா  சரி சரி "
"..."
"பசங்க இன்னும் வரல வர்ற நேரம்தான் "
"..."
"ஆமா வந்தான் , நான் பணத்த குடுத்துட்டேன் "
"..."
"ஆமா ஆமா நீங்க தந்துட்டு போன ஆயிரம் ரூபா தான் ... குடுத்துட்டேன்.
இருங்க ஊர்ல இருந்து சித்தப்பா வந்துருக்காங்க பேசனுமாம்  "
"..."
"மத்தியானமே வந்துட்டாங்க, இருங்க தரேன் "

"இந்தாங்க மாமா பேசுங்க"

"ஹலோ ராசு , நல்லருக்கியாப்பா "
"..."
"மத்யானமே வந்துட்டேன்பா.. நானும் சித்தியும்தான் வந்தோம்"
"..."
"ஆ.. சுபத்ரா மாப்ள எல்லாரும் நல்ல இருக்காங்க"
"..."
"ஆடி மாசம் நம்ம கோவில்ல திருவிழா வருதுல்ல , அப்போ சித்து-க்கு மொட்ட அடிச்சு காது குத்திடலாம்னு இருக்கோம், அதான் உங்கள எல்லாம் கூப்புட்டு போலாம்னு வந்தேன் "
"..."
"ஆடி மாசாம் நாலான் தேதி ராசு "
"..."
"மொத நாளே வந்துடனும்"
"... "
"நீ வர ராத்திரி  ஆகும்னு பூர்ணிமா சொல்லிச்சு , அதான் பேசிட்டு கெளம்பலாம்னு கூப்ட சொன்னேன்"
"...."
"ஆமா ராசு , இப்போ நேரா பவித்ரா வீட்டுக்குத்தான் போகணும் ,அவளையும் கூப்டுட்டு ... அலோ ...அலோ ...ராசு... அலோ ..."

"என்னம்மா பூரணி பேச பேச கட் ஆயிடுச்சு  "

*****

அடுத்த நாள் ...

தினத்தந்தி ...
"அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. 23 பேர் பலி "

சன்  நியூஸ் ....
" செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்திருக்கலாம் என்று கூறப்படுகிறது...."

புதிய தலைமுறை ...
"வாகனத்தை ஓட்டும் பொழுது செல்போன் பேச்சை தவிர்ப்பது ஓட்டுபவர் மட்டுமல்ல , எதிர்  முனையில் பேசுபவரின் பொறுப்பும் கூட"

இவைகளை படிக்கவோ  பார்க்கவோ  முடியாமல் , ராசு குடும்பத்தார் வேலூர் அரசு மருத்துவமனை முன் கூட்டத்தில் கதறிக்கொண்டிருந்தார்.