Pages

Friday, June 29, 2012

இலையுதிர் காலம்

இரண்டு நாட்களுக்கு முன்... ஒரு இலையுதிர் காலம் ....

"எனக்கு மனசு விட்டு அழனும் போல இருக்கு ...ஆனா  அவங்க முன்னாடி நானே உடைஞ்சுட்டா அவங்க எங்க போவாங்க ... பாவம் யாமினி ... "

கார்த்திக் - மீடியா துறையில் நன்கு அறியபட்ட திறமையான புடைப்பட கலைஞன்.ஒரு பிரபல கல்லூரியில் ஆசிரியர், ஒரு முன்னணி பத்திரிக்கையின் துணை ஆசிரியர்.

ஜனனி - கார்த்திக் யாமினியோட ஒரே மகள், 7-ஆம் வகுப்பு. கார்த்திக் போலவே போட்டோகிராப்பியில் ரொம்ப ஆர்வம் அவளுக்கு.

ஜனனியின் கனவிலேதான் வாழ்ந்தார்கள் கார்த்திக்கும் யாமினியும் ...

"ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட்டா, என்ன விட பெரிய ஆளா வரணும் அப்படிங்கறதுதான் அவளோட கனவு... இப்போவே என்னோட போட்டோஸ்ல கரெக்ஸன்ஸ்லாம் சொல்வா ... ரொம்ப சுட்டி ... அவள ஒரு மினி ஜீனியஸ்-னு அவங்க மிஸ் கூட போன வாரம்தான் சொன்னாங்க ... "

அவன் மெல்ல அந்த உதிர்ந்த இலைகளின் இடையே ஊர்ந்து நடத்து கொண்டிருந்தான் .மேலே உள்ள மரங்களை பார்த்தான் ...
"கொட்டுற இந்த இலை இன்னும் ஆறு மாசத்துல தழஞ்சுடும் ஆனா ஜனனியோட..."


அவன் எண்ணங்களுக்கு அணை போட்டது அந்த அலைபேசி அழைப்பு ...

"சொல்லுங்க டாக்டர்"

"இதோ பக்கத்துல தான் இருக்கேன் , உடனே வரேன் டாக்டர் "

 *****
சில நாட்களுக்கு முன் ... திருச்செந்தூரில் ...

"அப்பா அப்பா அந்த கண்ணாடி வேணும்பா "
"டேய் அது பொம்ம கண்ணாடிடா "
"பரவால்லப்பா வாங்கி குடுப்பா "
"டேய் வேலா, உனக்கு நான்வேற நல்ல கண்ணாடியா வாங்கி தரேண்டா"
"போறப்போ கேட்டா, சாமி கும்புட்டு வர்றப்போ வாங்கி தரேன்னு சொன்ன இப்ப அப்பறம் வாங்கி தரேன்னு  சொல்ற ..."

"அம்மா அம்மா", என காயத்ரியிடம் ஓடினான்...
தமிழரசனின் நிதி நிலைமை அறிந்த காயத்ரி, "வேணாம் கண்ணா... அந்த கண்ணாடி எல்லாம் போட்டா கண்ணு கேட்டு போய்டும்டா"

வேலன் - தமிழரசன் காயத்ரியின் மூத்த மகன். இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேண்டிய பின் பிறந்ததால் அவனுக்கு வேலன் என பெயர் வைத்து, வருடா வருடம் பள்ளி விடுமுறையில் வருவதை வழக்கமாய் கொண்டவர்கள்.

இவர்கள் வசிப்பது திருநெல்வேலி அருகே , தாழையூத்து. இருவருக்கும் அங்கே உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் வேலை, வீடும் அருகேதான் . சொந்த ஊர் ஈரோடு அருகில் ... பிழைப்புக்காக இங்கே வந்தவர்கள்.

"சீக்கிரமா நடடா, ராத்திரிக்குள்ள வீடு போய் சேரணும்... பஸ்சு நிக்குது பாரு ...", வேலனை இழுத்து கொண்டு வேகமாய் நடந்தால் காயத்ரி.

*****
இன்று ...

"ரொம்ப நன்றி டாக்டர், இவ்ளோ சீக்கிரம் எல்லாம் நல்லபடியா முடியும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல ", நிம்மதியாய் டாக்டர் அறையிலிருந்து வெளியே  வந்தார்கள் கார்த்திக் யாமினி...
வெளியே கார்த்திக்கின் பாஸ் நின்றுகொண்டிருந்தார் .. மலேசியா சென்றிருந்த அவர் இப்பொழுதுதான் வருகிறார்.
"ஆப்பரேசன் முடிஞ்சுதா கார்த்திக்"
"நல்லபடியா சார் "
"எப்படி கார்த்திக் ஆச்சு "
"ஸ்கூல்ல எதோ டிராமா ப்ராக்டிஸ்... இவளுக்கு பாரினர் வேடம்னு சொல்லி கூலிங்கிளாஸ் குடுத்துருக்காங்க ... போட்டுகிட்டே ஓடிருக்கா... அப்போ கீழே விழுந்தது கண்ணாடி ஒடிஞ்சு பீசஸ்லாம் கண்ண ஸ்பாயில் பண்ணிடுச்சு.. "
"சின்ன பொண்ணு பாவம்"
"கடவுள் புண்ணியத்துல இந்த Eye Transplantation நல்லபடியா முடிஞ்சுடுச்சு"
"கொஞ்ச நேரம் கரண்ட் இல்லைனாவே நம்மாளா முடியல, பாவம் அஞ்சு நாள் ரொம்ப கஷ்ட்டபட்டுருப்பா..."
"ஆமா சார், எங்களுக்கும் இந்த அஞ்சு நாள் இருட்டாதான் இருந்துச்சு"

*****
சில நாட்களுக்கு பின்...

"சொல்லுங்க கார்த்திக்"
"சார், ஜனனிக்கு ஐ டொனேட் பன்னவங்க அட்ரஸ் கெடச்சுடுச்சு. பொதுவா, யாரு தந்தாங்க யாருக்கு போனதுன்னு சொல்லமாட்டாங்க. டாக்டர் என் கிளோஸ் பிரண்டுஅதனால் நான் ரொம்ப கேட்டதால கண்டுபிடிச்சு குடுத்தார். நானும் யாமினியும் நேர்ல போய் அவங்கள பாத்துட்டு வரலாம்னு இருக்கோம், அதான் ரெண்டு நாள் லீவ் கேக்காலம்னு.."
"கண்டிப்பா "
"நாளைக்கு காலைல கெளம்பறோம் சார்"
"ஆமா எங்கன்னு சொன்னீங்க"
"திருநெல்வேலி பக்கத்துல, தாழையூத்து..."

******
தமிழரசன் வீடு, தாழையூத்து ....

"நீங்க நன்றி சொல்ல இவ்ளோ தூரம் வந்ததே பெருசுங்க, பணம் எல்லாம் ஏதும் வேண்டாம்"
"இதுல பத்து லட்சம் இருக்குங்க வெச்சுக்கோங்க..."
"வேணாம்ங்க..அந்த முருகன் குடுத்த புள்ளதான் எங்க வேலன். போன வருஷம் திருச்செந்தூர் கோயிலுக்கு போயிட்டு வரப்போதான் அவனுக்கு அப்படி ஆச்சு...பஸ்ல வரும் போது மூச்சி விட முடியலன்னு சொல்லிட்டே மயங்கி விழுந்தான். 
அப்பறம் நெறைய டெஸ்ட் எடுத்தாங்க, இந்த சிமென்ட் தூள் அவன் நுரையீரல பாதிச்சுடுச்சுன்னு சொன்னாங்க, ஏதேதோ வியாதி பேர் எல்லாம் சொன்னாங்க... ஒண்ணும் புரியல...
காப்பாத்த நெறைய செலவு ஆகும்னாங்க... என் சக்திக்கு முடிஞ்ச வரைக்கும் கடனை எல்லாம் வாங்கி போராடினேங்க... ஆனா முடியல...

உசுர குடுத்து கூட காப்பாத நாங்க ரெடி ஆனா குடுக்கற உசுருக்கு யாரு காசு தர்றா..
உசுர குடுக்கறேன்னா காசு கெடைக்காது, ஆனா உசுர காப்பாத்த விலை வெக்கறாங்க...
உசுர காப்பாத்துற மருந்து இருக்கு, என்ன பண்ணும்னு அறிவு இருக்கு, ஆனா காசில்லதவங்க உசுர காப்பத்தணும்னு யாருக்கும் மனசு இல்லைங்க...

இவன் போனதுக்கு அப்பறம் நெறைய பேர் வந்து சொன்னாங்க, இங்க ப்ரீயா பண்றாங்க அங்க பண்றாங்கன்னு... ஆனா படிக்காதவங்க நானு, அப்போ ஒண்ணும் தெரியல ஒண்ணும் புரியல...
இன்னும் மூணு மாசம்தான் இங்க கான்ட்ராக்ட், அது முடிஞ்சதும் இந்த ஊரே வேணாம்னு சொந்த ஊருக்கே போய்டுவோங்க, மீதி இருக்க இந்த இன்னொரு புள்ள உசுரயாவது காப்பாத்தனுங்க "
"சரிங்க அந்த பயனுக்காவது இது ஆகட்டுங்க..."
இந்த பணம் இருந்திருந்தா எங்க வேலன நாங்க அப்போவே காப்பாத்திருப்போம்.... இப்போ இந்த பணம் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி, எங்க வேலன் ஸ்கூலுக்கு வந்து, கண் தானத்த பத்தி யாரோ சொல்லிருக்காங்க. அப்போதான் அவன் வந்து அடம் பண்ணி அவனோட கண்ண தானம் பண்ண பதிவு பண்ணுனான், எங்களையும் பண்ண வெச்சான்.
நீங்க வேணா ஒண்ணு எங்களுக்காக செய்யுங்க, உங்களுக்கு ரெண்டு கண்ணு கெடச்சதுன்னா நீங்க நாலு கண்ணா குடுக்கலாமே..."


*****
திரும்பும் வழியில் ...

"படிச்சவங்க , நாம நல்லா இருக்கணும்னு நெனைக்கறோம் , படிக்காதவங்க , யாரவது நல்ல இருக்கட்டும்னு நெனைக்கறாங்க , இதான் யாமினி அவங்களுக்கும் நமக்கு வித்தியாசம்"

அவன் சொல்வதை காதில் வாங்காமல் அவள் மனது Eye Bank காண்டாக்ட் நம்பர் யாரிடம் வாங்கலாம் என எண்ணி கொண்டிருந்தது .

*****

Monday, June 25, 2012

உயிர் 2.0

இக்கதையின் முதல் பகுதி இங்கே.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில்,முருகனும் கணபதியும் , இருவரும் ரயில்வே போலிஸ். 

"முருகா , அது பிக்பாக்கெட் மணி மாதிரியில்ல இருக்கு.."
"ஆமாயா அவனேதான்,சீக்கிரம் வா புடிப்போம் "

இவர்கள் கவனித்ததை பார்த்த மணி, ரயில் பாதையிலேயே  ஓட துவங்கினான் . சிறிது தூரம் ஓடிய  பின் ஒரு ரயில் வருவதை கவனிக்காமல் திடீரென வேறு ஒரு Track-க்கு மாற நினைத்து அந்த ரயிலில் அடிப்பட்டு சிதைந்து போனான்.

துரத்தி வந்த இருவருக்கும்  அதிர்ச்சி, இது வெளிய தெரிந்தால் தாங்கள் துரத்தி வந்துதான் அவன் இறந்தான் என தெரிந்து பிரச்சனை ஆகிவி டும் என பயந்து வேகமாக திரும்பி விட்டனர்.

சிறிது நேரத்தில் தகவல் ரயில்வே போலிஸ் நிலையத்திற்கு வந்தது.

"சார் சீக்ரமா கையெழுத்து போடுங்க, ஒரு கேஸ் வந்துருக்கு போகணும் ... "

தன்  தாயே தன் சாவை தடுத்து நிறுத்தியதாக நினைத்து கலங்கி நின்ற ராம் மீண்டும் நிகழ்காலம் வந்தான்.

அவன் காப்பாற்றிய அந்த குழந்தையின் தாய்  ராமிடம்  நன்றி தெரிவித்து அவன் அட்ரசை வாங்கி கொண்டு அவர்கள் அட்ரசையும் கொடுத்தனர். இவனோ  போலியான ஒரு அட்ரஸ்தான் தந்தான்.

"மனிதனுக்கு உயிர் கொடுக்க மட்டுமே உரிமை இருக்கிறது, தன்  தாய் தந்த  உயிரை எடுக்க உரிமை இல்லை"  என்பதை உணர்ந்தான். இனி வீட்டிற்கு போக மனமில்லை, சாகவும் துணியவில்லை.

அடுத்த நாள் ...

ராம், தான் ஏற்கனவே வேலை செய்த கம்பெனியின் முதலாளியிடம் சென்று நடந்தவை எல்லாம் சொல்லி மீண்டும் தனக்கு வேலை தரும்படி கேட்டான் . ஆனால் இதே ஊர்  வேண்டாம் வேறு ஊரில்  வேலை தருமாறு கேட்டுக்கொண்டான். அங்கே சென்று யாருக்கும் தெரியாமல் வாழப்போவதாக  தெரிவித்தான்.

ஏற்கனவே அந்த முதலாளிக்கு இவன் மேல் நல்ல மதிப்பு இருந்ததால் , ஓசூர் கிளையில் சேருமாறும், அப்படியே புதிதாய் பெங்களூரில் தொடங்கப்போகும் கிளையின் பணிகளையும் கவனிக்கும்படி சொன்னார். சில ஆயிரங்களையும் தந்து, அந்த கிளையின் மேனேஜரிடமும் பேசினார். ராம், இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என கூறினான், அவரும் அவன் நிலை உணர்ந்து சரி என்றார்.

ராம், ஓசூர் வந்த இரண்டாவது நாளில் முதலாளி போன் செய்து அந்த அதிர்ச்சி செய்தியை சொன்னார். அவனால் நம்பவே முடியவில்லை, இருந்தாலும் இப்பொழுது அங்கே வருவது சரி இல்லை என்றும் இன்னும் மூன்று வாரம் கழித்து  வருவதே சிறந்தது என்று கூறினான், அவரும் சரி என்று ஒத்துக்கொண்டார்.

மூன்று வாரம் ஓடியது ....
ராம் அந்த இரவு நேரத்தில் முதலளில்யை சந்தித்தான் ...

"மொதல்ல, நீ எதுக்கு சாகனும்னு முடிவு பண்ணின"
"அன்னைக்கு நான் உயிரை விட்டா கூட கவலை பட யாரும் இல்லைன்னு இருந்த போது, என் உயிரை பத்தி எனக்கு எந்த கவலையும் வரல சார்"
 "இப்போ பாரு என்னென்னவோ நடந்துடுச்சு ... இவ்ளோ கொழப்பம் பாரு"
"ஆனா நான் தெளிவாகிட்டேன் சார்"
"என்ன சொல்ற "

"நீங்க தகவல் சொன்ன அந்த வாரமே நான் இங்க திரும்ப வந்து அந்த ரெயில்வே  போலிஸ் கிட்ட ரகிசயமா உண்மையா எல்லாம் சொல்லி நடந்தத  விசாரிச்சுட்டேன்"
"என்ன நடத்துச்சு?"
" சார்... நான் ட்ரைன்ல இருந்து குதிக்க நெனச்சப்போ ஒருத்தர் என்னோட பார்ச திருடிருக்கார், அவர் போலிஸ் கிட்ட மாட்டாம  இருக்க தப்பிச்சு போகும் போது ட்ரைன்ல அடிப்பட்டு சிதைஞ்சு இறந்துட்டார். அவர் கிட்ட இருந்த பர்ஸ் பாத்துட்டு எங்க வீட்டுக்கு தகவல் சொல்லிருக்காங்க. நானும் SMS  அனுப்பினதால அவங்களும் நம்பிட்டாங்க.
எங்க மாமனார் குடும்ப மானம் போய்டும்னு பணம் குடுத்து  தற்கொல விஷயத்த மறைச்சு, நானும் மைதிலியும் ட்ரைன்ல போகும்போது விழுந்து இறந்துடதா கதைய மாத்திட்டார்."
"அப்போ விவாகரத்து ?"
"அதுவும் பிராடுதான். எங்க என்னோட கடன் தொல்லை எல்லாம் அவங்களுக்கு வந்துடுமோன்னு பயந்து. ஏற்கனவே எனக்கும் அவளுக்கு விவாகரத்து அப்ளை பண்ணியாச்சுன்னு சொல்லிட்டாங்க, அதுக்கான ரெக்கார்ட் எல்லாம் போலியா ரெடி பண்ணிட்டாங்க."
"அவ்வளவு கொடுரமனவங்களா...  "
"அவங்களும் மனுஷங்கதான சார்  "
"இனி"
"சார் இப்போ என் பிரண்டு மூலமா வேற பேர்ல ஒரு லைசன்சு,பாஸ்போர்ட் எல்லாம் வாங்கிட்டேன். எந்த லஞ்சத்த வெச்சு அவங்க நான் செத்துட்டதா செஞ்சாங்களோ, அதே லஞ்சத வெச்சு நான் புதுசா பொறந்துட்டேன், சிவாஜி படத்துல வர்ற ரஜினி மாதிரி சார்."

"வாவ் கிரேட்"
"அந்த பிக் பாக்கட் பேரு மணி , 29 வயசு ஆகுது". 29 வருடங்களுக்கு முன்னாள் இறந்த அவன் தந்தையின் பெயர்.

"இதுல அதிசயம் என்னான்னா.... என்னோட உயிரை காப்பதினது எங்க அம்மான்னா... எனக்காக உயிரை விட்டது எங்கப்பா சார் ...

மனுஷனுக்கு உயிருங்கறது ஒன்னு இல்ல சார் ... ஒவ்வொரு உறவும் ஒரு உயிர். ஒண்ணொண்ணா பிரியுறப்போ ஒரு உயிர் போகுது. கடைசி உறவு போனதுமே அவன் வெறும் பொணம்தான்.

அப்படி ஒரு பொணமாத்தான் நான் சாக போனேன்... ஆனா விதி என்ன சாகவிடல...

இனியும் நான் சாகக்கூடாது, நான் வாழனும்.... ஒரு குழந்தைய தத்தெடுத்து வளரக்க போறேன் சார், புது உறவு ... புது உயிர் ... அந்த உயிருக்ககாவே நான் வாழப்போறேன் சார்"

"You are great Ram ... Sorry.... You are great Jeeva" என்றார் முதலாளி...