ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...
"ஹலோ பூரி இருக்காங்களா "
"இல்லையே "
"இல்லையா ... "
"டீ சாப்ட போயிருக்காங்க "
"ஒ... சரி சரி .. நீங்க..."
"நான் மசால் தோசை "
"எப்ப வருவாங்க"
"இன்னும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கால் பண்ணுங்க"
"சரிங்க"
"நீங்க யாரு பேசறது... "
"நான் கார வடை ..."
"சரிங்க.... வந்தா நான் சொல்றேன்..."
ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங் ...
"ஹலோ கார வடையா "
"ஆமாங்க"
"நான்தான் பூரி பேசுறேன்"
"நீங்க ஸ்ட்ரைக் பண்ணனும்... நாங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்ண போறோம்..."
"என்னது ..."
"ஆமாங்க, உங்களாலதான் எங்களுக்கு பிரச்சனையே "
"எங்களால உங்களுக்கு என்ன பிரச்சனை?"
"உங்கள பொறிச்ச எண்ணைலதான் எங்களையும் பொறிக்கறாங்க.. அது எங்களுக்கு புடிக்கல.. நாங்க ரொம்ப கருப்பாகிடுறோம் ...."
"போங்கடா லூசுங்களா "
..... டொப் .....
"என்னாச்சு பூரி "
"பாருங்க மசால் தோசை அண்ணே ... இந்த கார வடைங்க எங்கள ஸ்ட்ரைக் பண்ண கூப்புடுறாங்க... "
"எதுக்கு ?"
"எதோ, எங்கள பொறிச்ச எண்ணைல அவங்களையும் பொறிக்கறாங்களாம் , அது புடிக்கலயாம் அதான் ஸ்ட்ரைக் பண்ண போறாங்களாம்"
"அட பாவிங்களா , அப்படி பாத்தா , வடை சுட்ட எண்ணைலதான் எங்களையே வேக வெக்கறாங்க.. நாங்க எங்க போறது ..."
"காரவடை தோழர்களே .... பூரி நமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை.. ஆனாலும் நாம் நமது போராட்டத்தை துவக்குவோம் ...
இனி பூரி பொறித்த எண்ணையில் நம்மை பொறித்தால் நாம் வேகக்கூடாது ... எவ்வளவு சூடக்கினாலும் நாம் தளரக்கூடாது ...."
"ஐயா ... பருப்பு சரி இல்லைன்னு நெனைக்கறேன் வடை வேகவே மாட்டேங்குது..."
"அதெப்புடி... அதே பருப்புதாண்டா ..."
"எண்ணைல ஏதாவது பிரச்சனையா இருக்கும் ... விடு வேற எண்ணைல போட்டுக்கலாம்... இப்போதைக்கு அரை வேக்காட்டுலையே எடுத்துடு ... கஸ்டமர் எல்லாம் வர்ற நேரம் ஆகிடுச்சு ..."
"காரவடை தோழர்களே.... நமது போராட்டம் வெற்றி பெரும் தருணத்தை எட்டி விட்டது ...."
"டேய் நேத்து வடை வேகலைன்னு சொன்னியே.... இந்தா... இது பக்கத்து கடைல மீன் பொறிச்ச எண்ணை ... இதுல நல்ல வேகுமாம் ... சீப்பா வாங்கியாந்துட்டேன்..."
ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங்...
"ஹலோ மீன் இருக்கான்களா ...."
நீதி : எண்ணெய் உணவுகளை தரமான கடைகளில் வாங்கிடுங்கள்.
"ஹலோ பூரி இருக்காங்களா "
"இல்லையே "
"இல்லையா ... "
"டீ சாப்ட போயிருக்காங்க "
"ஒ... சரி சரி .. நீங்க..."
"நான் மசால் தோசை "
"எப்ப வருவாங்க"
"இன்னும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கால் பண்ணுங்க"
"சரிங்க"
"நீங்க யாரு பேசறது... "
"நான் கார வடை ..."
"சரிங்க.... வந்தா நான் சொல்றேன்..."
*******

-- முற்றும் --