Pages

Thursday, April 26, 2012

சுவடு - கரியான் (பகுதி 6)

கரியான்

[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]
[பகுதி 4  - குளச்சல்]
[பகுதி 5 - வைரவன்

பால நம்பூதிரி ஒரு கட்டு பேப்பர்களை கொடுத்தார். இது 'டீ லானாய்' (De Lannoy)  எழுதிய போர் பற்றிய குறிப்புகள்.

"அது யாரு "
"அவர்தான் டச் படையின் தலைவர். தோல்வி அடைந்த பிறகு அவரை கைது செய்தனர். ஆனால் பின்னர், சமஸ்தானத்தின் படை தலைவராக பணி புரிந்தார், பத்து ஆண்டு காலம் அவர் இங்கேதான் இருந்தார், அப்பொழுது அவர் போர் பற்றிய புத்தகம் எழுத நினைத்து ஆரம்பித்தார். ஆனால் அவர் அதை முடிக்கவே இல்லை, புத்தகமும் வரவில்லை. அவர் எழுதிய போர் குறிப்புகள்தான் இது.

அவர் கிறித்தவர் என்பதால், அவர் சமஸ்தான மாளிகைக்கு வர அனுமதியில்லை . அவர் உதயகிரியில் இருந்தார். அதனால் இது பெரிதாய் கவனிக்கபடவில்லை. பலர் கை மாறி இப்பொழுது என்னிடம் உள்ளது."

"இதுல என்ன கிடைக்கும்" என்றான் விக்ரம்.

"பாருங்க... " என்றா பால நம்பூதிரி.

அதில் இருந்த தகவலை பார்த்த விக்ரமுக்கும் ஹரிக்கும் மேலும் குழப்பமானது.

"எதுவும் குழம்ப வேண்டாம் , என் கூட வாங்க" என்றார்.

அவர்கள் சென்றது, கோதை ஆற்றில் அமைந்துள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சி. அதன் அருகில் ஒரு இழைகளாலான குடில், ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. உள்ளே இருந்து ஒரு வயதான பெரியவர் வந்தார். பால நம்பூதிரி அவரிடம் எதோ பேசினார்.


பேசிவிட்டு வந்த பால நம்பூதிரி, இவர்களிடம் வந்து, "என்னை முழுசா நம்புங்கள், எதுவும் பேசாமல் வாருங்கள், நம் பல கேள்விகளுக்கு இப்பொழுது விடை கிடைக்கும்" என்றார்.

அந்த ஆற்றின் மறு கரையில்தான் அந்த சிவன் கோவில் (ஸ்ரீ மகாதேவர் ஆலயம்) இருந்தது. 

அனைவரும் உள்ளே சென்றனர். விக்ரம் மட்டும் அந்த கோவிலை பார்த்துக்கொண்டே சென்றான்.

அந்த பெரியவர் விக்ரமுக்கு எதோ குடிக்க கொடுத்தார். அறை  முழுவது புகை போட்டு வைத்தார். அந்த புகை முழுவதும் வெளியேறும் நேரம் சரியாக அவனும் மயங்கினான். அனைவரும் சேர்ந்து அவனை படுக்க வைத்தனர்.

விக்ரமின் காதில் அந்த பெரியவர் எதோ ரொம்ப நேரம் சொல்லிக்கொண்டிருந்தார்.....

"சத்தமா ... சத்தமா.... இன்னும் சத்தமா எல்லோருக்கும் கேக்குற மாதிரி சொல்லு வைரவா .... சொல்லு வைரவா .... "

"போர்ல வென்றதும் நாங்கள் அனைவரும் சந்தோசமாக  தலைநகர் நோக்கி திரும்பினோம். சிறிது தூரம் வந்ததும், கரியான் அவனோட வாள் போர்க்களத்தில்  தவறி விட்டதாகவும் அது இல்லாமல் போனால் அதை விட அவமானம் இல்லை என்றும் என்னிடம் மட்டும் சொல்லி , என்னை மட்டும் தேட அழைத்தான். நானும் அவனுடம் சென்றேன். அங்கே சென்று தேடிக்கொண்டிருக்கும் போது அவன் வாளை எடுத்து என்னை கொன்று விட்டான் .. அவன் வாள் தொலையவில்லை மறைத்து வைத்திருக்கிறான்.. கொன்று என்னையும் கடலில் வீசிவிட்டான்."

"அவன் கொள்ளும் போது ஏதாவது சொன்னானா ... ஏதாவது பேசினானா..."

"...."

"சத்தமா... சத்தமா சொல்லு ... அவன் ஏதாவது சொன்னானா..."

"ஆமா... பைரவி இனி எனக்குதான் என்று சொல்லிக்கொண்டே என்னை குத்தினான்"

[பகுதி 7 - பைரவி]
[சுவடு - நிறைவு பகுதி

No comments:

Post a Comment