நினைவலைகள்
[பகுதி 1 - கடல் அலைகள் ]
டிசம்பர் 30 , 2004 இரவு பதினோரு மணி
அன்றிரவு விக்ரமின் அலமாரியில்தான் அந்த வாள் தூங்கியது. அவனும் தூங்க ஆரம்பித்தான். ஆழ்ந்த தூக்கத்தில் செல்ல செல்ல அவனுள் அந்த படம் ஓடியது ....
போர்க்களம்...
போர்க்காட்சி...
குதிரை படை...
வாள்...
சங்கு சின்னம்..
கடற்க்கரை...
இதே காட்சிகள் அவனுள் திரும்பத்திரும்ப வந்தது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்.
"இது கனவா... இல்லை இல்லை... கனவு போலவே இல்லை.... கண் முன்னாடி படம் மாதிரியே ஓடுதே , நிச்சயமா இது கனவு இல்லை. "
அவசரமாக எழுந்தது அந்த வாளை எடுத்தான், இப்பொழுதும் அதே மின்னல் போன்ற உணர்வு .
"அதேதான்.... அதே வாள்தான்.... காட்சிகளில் வந்த அதே வாள்தான்"
மிகவும் குழம்பினான்.
அந்த வாளினை தீவிரமாக ஆராய்ந்தான்.
லேப்டாப், கூகிள் என அனைத்து உதவியும் சேர்த்துக்கொண்டான் .
அந்த வாளில் அவன் கண்ட காட்சிகளில் வந்த சங்கு போன்ற சின்னமும் பொரிக்கப்பட்டிருந்தது. மேலும் அதன் கைப்பிடியில் ஒரு செயின் போன்று எதோ சுற்றியிருந்தது.
"ஏதோ அறிய பொக்கிஷம்... இத வெச்சு ஒரு எப்பிசோட் பண்ணலாம்னு நெனைச்சா, இதுல வேற எதோ இருக்கும் போல இருக்கே....
பவானிக்கு போன் பண்ணி சொல்லாலாமா... வேணாம் காலைல வந்த கனவுல அவளே பயந்திருக்கா... இன்னும் இதெல்லாம் சொன்னா அவ்ளோதான்."
அந்த வாளை பற்றி ஆராய ஆரம்பித்தான். அன்றிரவு முழுவதும் தூங்கவே இல்லை .
தன் கண் முன்னே வந்த காட்சிகளை முடிந்தவரை படமாக வரைந்து வைக்க முயன்றான். ஆனால் அவனால் ஒரே ஒரு படம் மட்டும் வரைய முடிந்தது. அது ஒரு தூண், அதன் உச்சியில் ஒரு சங்கு.
விடிந்ததும் ஹரிக்கு போன் செய்து வர சொன்னான், அவனது நீண்ட நாள் மீடியா நண்பன்.
"என்னடா இவ்ளோ காலைல, எனி ஹாட் நியூஸ்?"
"இதோ பாருடா, நேத்து நைட் பீச்ல கெடச்சது,எங்கிருந்தோ சுனாமில அடிச்சிட்டு வந்துருக்கு" என ஆரம்பித்து தனக்கு நேர்ந்ததெல்லாம் சொன்னான்.
அமைதியாய் கேட்டு கொண்டிருந்த ஹரி அவன் வரைந்து வைத்திருந்த படத்தை பார்த்தான்.
"டேய் விக்ரம், நான் இத எங்கயோ பாத்திருக்கேன்டா. அந்த லப்டாப் இங்க குடு "
"என்ன சொல்ற இது இப்பயும் இருக்கா"
"இருடா..." என் கூறி ஹரி மும்முரமாய் இன்டர்நெட்ல் எதோ தேடினான்.
அவன் கிட்டதட்ட அதே போன்ற படத்தை காட்டினான்.
"இது... இது... இதுதாண்டா பாத்தேன்" மிகவும் அதிசயித்தான்.
அதே தூண்
தான் கண்டது நிஜமாய் இருப்பதை நினைத்து பிரமித்தான் விக்ரம்.
"நாளைக்கே போறோம் விக்ரம்"
[பகுதி 3 - பயணம் ]
[பகுதி 4 - குளச்சல்]

No comments:
Post a Comment