Pages

Wednesday, April 25, 2012

சுவடு - பயணம் (பகுதி 3)

பயணம்

[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]

கடல் அலைகளும் நினைவலைகளும் அதன் பங்கை முடித்திருந்தன.

"ஹே சாரி லேட்டாதான் SMS பாத்தேன்"
"பரவால்ல பவானி, ஒரு கவரேஜ் விஷயமா  இன்னைக்கு நைட்டே கன்னியாகுமரி போறேன், வர்ற ஒரு வாரம் ஆகும். அதான் நேர்ல பாத்து  சொல்லிட்டு போலாம்னு வர சொன்னேன் "
"என்ன திடீர்னு"
"இல்ல ஒரு சென்சிட்டிவ் கவரேஜ். Important கூட. ஹரி மட்டும்தான் போக வேண்டியது, இப்போ எங்க ரெண்டு பேரும் போக சொல்லிட்டாங்க. சக்சஸ் ஃபுல்லா முடிச்சிட்டா பெரிய ரிவார்ட் கெடைக்கும்"
"ஓ... அப்படியா , ஆள் தி பெஸ்ட்" என கை கொடுத்தாள்.

அப்பொழுதுதான் அவன் அதனை பார்த்தான்....
"இதென்ன விரல் நடுவுல ஒரு மச்சம், இவ்ளோ நாளா  நான் பாக்கலையே ..."

"ஹேய் ஆமா லக்கி மச்சம்... இத பாத்துட்டல்ல,  சக்சஸ்தான்"
"சரி ஹரி வெய்ட் பண்ணுவான் நான் கெளம்பறேன, ஸ்டேஷன் போயிட்டு  கால் பண்றேன்.

முதல் முறையாக பவானியிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பினான்.

"சாரிடா ஹரி... பவானி பாத்துட்டு வர லேட் ஆகிடுச்சு"
"என்ன சொன்னா"
"நான் எதுமே சொல்லல, ஒரு முக்கியமான கவரேஜ்ன்னு மட்டும் சொல்லிட்டேன்"
"பரவால்லடா, எவ்ளோ நாள் சொன்ன"
"ஒரு வாரம்"
"அவ்ளோ நாள் வேணுமா"
"தெரியல...  அங்க போனா இன்னும் என்னெல்லாம் ஆகுமோ..."
"நாகர்கோயில்ல  என் Friend இருக்கான். போனதும் அவனோட கார் எடுத்துக்கலாம்"
"சரி வேற எதாவது டீட்டெய்ல்ஸ் கெடச்சதா?"
"ம்ம்ம்.... நெறைய...

இந்த வாள்,  சேபர் (Sabre) வகை, இது 18ம் நூற்றாண்டுல இருந்தது. அதனால நேத்து நாம பாத்த விஷயத்துக்கும் இதுக்கும் கண்டிப்பா சம்பந்தம் இருக்கும். உன் கண் முன்னாடி வந்த காட்சிகள் அங்க போனா உண்மையா இருக்கலாம்"

"எல்லாமேவா"
"தெரியல வா போயிதான் பாப்போம்"

விக்ரம், ஹரி அந்த வாள் மூவரும் அன்றிரவு பயணத்தை தொடங்கினர்.

அந்த இரவும் அதே காட்சிகள் அவனுக்குள் ஓடியது... ஆனால் இந்த முறை பவானியின் கைகளில் பார்த்த மச்சமும் ....

[பகுதி 4  - குளச்சல்]
[பகுதி 5 - வைரவன்]  

1 comment:

  1. Suspense building ... Now I know why history is so complex : ))) Good narrative ... Will wait for the next episode ... : )) @sweetsudha1

    ReplyDelete