Pages

Saturday, March 24, 2012

காக்க.. காக்க..


அன்பு. அவனுக்கும் இந்த உலகத்துக்கும் நடுவுல அந்த இரும்பு கம்பி இப்போ...

"நான் போகணும்... இங்கருந்து போகணும்... மாயா.. அவள இந்நேரம் கொண்டு போயிருப்பாங்க...

மாயா...

நாங்க நாலு பேர் ... நான், மணி, ராஜா, டேவிட்... எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது...

ஏரியாவே எங்க கண்ட்ரோல்லதான்... யாரும் எங்கள மீறி எங்க ஏரியால ஒண்ணும் பண்ணமுடியாது.. 

பயம்... எல்லாருக்கும் எங்க மேல பயம்... நாங்க நெறைய பேர போட்ருக்கோம் ... நடு ரோட்ல வெச்சே... எங்கள தட்டி கேட்க யாருக்கும் தைரியம் வரல...

அந்த பொட்டி கடைலதான், சிகரெட் பத்த வெச்சப்போ... பளீர்ன்னு அவ பாத்தா... மூணு நாள் அந்த பார்வைய மறக்கவே முடியல ..

திரும்ப இன்னொரு நாள் நைட்டு அவள பாத்தேன்... அவ சினிமாக்கு போயிட்டு வந்துட்டு இருந்தா...  வேகமா அந்த வண்டி என் கண்ட்ரோல்ல இருக்கற எரியாக்கு வந்தது... ஆனா நான் தடுக்க போறதுக்குள்ள வண்டி நிக்காம போய்டுச்சு ... ஆனா அவ மட்டும் என்னை பாத்தா...

அந்த சமயம்தான் அந்த ஊருக்கு புதுசா வந்தான், பாண்டியா.... அதுக்கு முன்னாடி மும்பைல இருந்தான்... இப்போ எங்க ஊருக்கு கலெக்டர்... ஆனா அவன் வேலைதான் அவன் பாத்துகிட்டு இருந்தான்.. எங்கள தொந்தரவு பண்ணல...

ஒரு நாள் சாயந்திரம், அந்த காபி ஷாப் முன்னாடி அவள பாத்தேன்.... அவ ரோட்டுக்கு அந்த பக்கம் இருந்தா, நான் இந்த பக்கம் இருந்தேன்... அவ என்னைய பாத்துக்கிட்டே ரோட்ட கிராஸ் பண்ணினா ... ஒரு தண்ணி லாரி அவள அப்படியே அடிச்சுடுச்சு... மொத தடவ என் கண்ணுல தண்ணி... நான் அவள் நெருங்கறதுக்குள்ள, அங்க இருந்தவங்க அவள தூக்கிட்டு போய்ட்டாங்க...

எந்த ஆஸ்பத்திரி-ன்னு தெரியல நானும் தேடிப்பாத்தேன் கெடைக்கல... ஒரு வாரம் கழிச்சு அவள் பாத்த பிறகுதான், எனக்கு உயிரே வந்துச்சு... அப்போ அவ கிட்ட என்னோட காதல சொல்லனும்னு நெனச்சேன்...

எவ்வளவு பெரிய வீரன்னாலும் காதல்னா எதோ ஒரு பயம் வருது... அப்போ கூட இருந்த மணி கிட்ட நான் என்னோட காதல சொல்ல போறேன்னு சொன்னேன்.. அவனும் எப்படி சொல்லுவனு கேட்டான். நான் சொல்ல ஆரம்பிக்கும் போது ... அது...அந்த சம்பவம் நடந்தது...

ஒரு கார்.. மணியை அடிச்சுடுச்சு... என் கண்ணு முன்னாடி துடிச்சான்... அந்த கார நான் தொரத்திட்டு போனேன், ஆனா புடிக்க முடியல... திரும்ப வந்து பாத்தப்போ மணி செத்துட்டான்... ஒருத்தரும் ஹெல்ப் பண்ணல... ஜெனங்களோட பாதுகாப்புக்கு நாங்க வேணும் ஆனா எங்களுக்கு ஒரு பிரச்சனைனா உதவி பண்ண யாரும் இல்ல...

ஒரு நாள் நைட்டு நான்,ராஜா, டேவிட் மூணு பேரும் இருக்கறப்போ அந்த கார மறுபடி பாத்தேன்... பாலோ பண்ணினோம்... ஒரு ரெயில்வே ஸ்டேஷன்க்கு போய் நின்னது அந்த கார்... அதுலருந்துதான் இறங்கினான் சேது... மணி சாவுக்கு அவன் இன்னைக்கு பதில் சொல்லனும்னு முடிவு பண்ணி மூணு பேரும் அவன தொரத்தினோம்... எங்கள பாத்து ஓடினான் அவன்...

அவன் விதி ... ஒரு முட்டு சந்து... கடவுள் மேல நம்பிக்க ஜாஸ்தி போல... கடவுள வேண்டுனான்... ஆனா நங்கள் விடல .. அங்கேயே வெச்சு போட்டோம்... 

சேதுக்கு பண்டியான்னு ஒரு தம்பி இருக்கறது அப்போ எங்களுக்கு தெரியாது... இந்த ஊரு கலெக்டர்... அவன் எங்களுக்கு குறி வெச்சான்.. ஊருல இருக்கற எங்கள மாதிரி எல்லாரையும் தூக்க சொன்னான்...

நேத்து நைட்டு மாயாவ தனியா பாத்தேன்... அவ கிட்ட என் காதல சொல்லி இந்த ஊற விட்டே போனும்னு முடிவு பண்ணி நெருங்கினேன்...

எதிர்பாக்காத அந்த நேரத்துலதான் பாண்டியா ஆளுங்க வந்தாங்க... ராஜா டேவிட் ரெண்டு பேரையும் போட்டுட்டாங்களாம்...

என்னையும் தூக்கிட்டாங்க...

இதோ இப்ப இவங்ககிட்ட மாட்டிகிட்டேன்... தப்பிக்கணும்.. என் மாயாவ பாக்கணும்.."

டிஷ்யும்...டிஷ்யும்...டிஷ்யும்... டுமீல்... டுமீல்... டுமீல்...

உயிரின் உயிரே ... உயிரின் உயிரே ... உயிரின் உயிரே ... நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்... - பாண்டியா செல்போனின் ரிங்க்டோன் பாடியது..

"சார், உங்க அண்ணன கடிச்ச அந்த கடைசி நாயையும் புடிச்சு சுட்டோம் சார். ரொம்ப நேரமா கத்திகிட்டே இருந்தது, அதான் நீங்க வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேணாம்னு நாங்களே சுட்டுடோம் சார். இனிமே உங்கள் ஏரியால நாய் தொல்லையே இருக்காது சார். ", போனில் பாண்டியாக்கு தகவல் வந்தது...

'ஒன்றா ரெண்டா ஆசைகள்' என்று பாடியவாறே அன்புவின் ஆவி பறந்து மாயாவிடம் சென்றது...

மாயா பக்கத்துக்கு வீட்டு சீக்கா (ஹட்ச் டாக்) கிட்ட அன்பு பத்திதான் சொல்லிக்கிட்டு இருந்தா...

"மொதல்ல அவன் எங்க வாட்ச்மேன் சிகரட் குடிக்கரப்போதான் பாத்தான்.. பொருக்கி மாதிரி ஒரு கூட்டத்தோட.. நான் மொரச்சேன், போய்ட்டான்.. அப்பறம் ஒரு நாள் கார்ல என்ன வெளிய கூட்டி போனாங்க.. கூடவே கொரச்சிகிட்டே ஓடி வந்தான்... 

இன்னொரு நாள், அந்த காபி ஷாப் முன்னாடி அவன் ரோட்டுக்கு அந்த பக்கம் நின்னுக்கிட்டு இருந்தான், எங்க வந்து கடிச்சு வெச்சுடுவானோன்னு பயந்துக்கிட்டே கிராஸ் பண்ணப்போதான் லாரில அடிபட்டுடேன்...

கடைசியா கலெக்டர் அண்ணனயே கடிச்சு வெச்சுடுச்சுங்க.. அப்பறம்தான் கலெக்டர் சொல்லி, கார்பரேஷன்காரங்க, எல்லாம் தெருநாய்களயும் புடிச்சுகிட்டு போனாங்க... அவன புடிக்கறப்போ கூட நான் பாத்தேன்... என்ன கடிக்கற மாதிரியே கிட்ட வந்தான்...  இப்பதான் நிம்மதியா இருக்கு..."

இதெல்லாம் கேட்ட அன்புவின் ஆவி, இனிமேல் இங்க இருக்க கூடாதுன்னு கடவுள்கிட்ட போயிடிச்சு... போயி... "கடவுளே... நாயா பொறந்தா இப்படிதான் நடக்கும்... அடுத்த ஜென்மத்துல நான் போலீசா பொறக்கணும்... மாயாவே என் கிட்ட வந்து காதலிக்கறேன்னு சொல்லணும்... அந்த பாண்டியாவ நானே போடணும்... "

கடவுள் : "உன் ஆசை நிறைவேறட்டும்"

[முற்றும்]

2 comments:

  1. Asusual Rocking :)

    ReplyDelete
  2. இந்த தடவையும் மாத்தி யோசிச்சிருக்கீங்க - கடைசி வரை கெஸ் பண்ணவே முடியல பா - கதையை சுவாரஸ்யமா கொண்டு போயிருக்கீங்க ... @ஸ்வீட்சுதா

    ReplyDelete