"ஹலோ "
"..."
"எங்க இருக்கீங்க "
"..."
"புரியல ஒரே சத்தமா இருக்கு "
"..."
"என்னது வேலூர் கிட்டயா சரி சரி "
"..."
"பசங்க இன்னும் வரல வர்ற நேரம்தான் "
"..."
"ஆமா வந்தான் , நான் பணத்த குடுத்துட்டேன் "
"..."
"ஆமா ஆமா நீங்க தந்துட்டு போன ஆயிரம் ரூபா தான் ... குடுத்துட்டேன்.
இருங்க ஊர்ல இருந்து சித்தப்பா வந்துருக்காங்க பேசனுமாம் "
"..."
"மத்தியானமே வந்துட்டாங்க, இருங்க தரேன் "
"இந்தாங்க மாமா பேசுங்க"
"ஹலோ ராசு , நல்லருக்கியாப்பா "
"..."
"மத்யானமே வந்துட்டேன்பா.. நானும் சித்தியும்தான் வந்தோம்"
"..."
"ஆ.. சுபத்ரா மாப்ள எல்லாரும் நல்ல இருக்காங்க"
"..."
"ஆடி மாசம் நம்ம கோவில்ல திருவிழா வருதுல்ல , அப்போ சித்து-க்கு மொட்ட அடிச்சு காது குத்திடலாம்னு இருக்கோம், அதான் உங்கள எல்லாம் கூப்புட்டு போலாம்னு வந்தேன் "
"..."
"ஆடி மாசாம் நாலான் தேதி ராசு "
"..."
"மொத நாளே வந்துடனும்"
"... "
"நீ வர ராத்திரி ஆகும்னு பூர்ணிமா சொல்லிச்சு , அதான் பேசிட்டு கெளம்பலாம்னு கூப்ட சொன்னேன்"
"...."
"ஆமா ராசு , இப்போ நேரா பவித்ரா வீட்டுக்குத்தான் போகணும் ,அவளையும் கூப்டுட்டு ... அலோ ...அலோ ...ராசு... அலோ ..."
"என்னம்மா பூரணி பேச பேச கட் ஆயிடுச்சு "
*****
அடுத்த நாள் ...
தினத்தந்தி ...
"அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. 23 பேர் பலி "
சன் நியூஸ் ....
" செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்திருக்கலாம் என்று கூறப்படுகிறது...."
புதிய தலைமுறை ...
"வாகனத்தை ஓட்டும் பொழுது செல்போன் பேச்சை தவிர்ப்பது ஓட்டுபவர் மட்டுமல்ல , எதிர் முனையில் பேசுபவரின் பொறுப்பும் கூட"
இவைகளை படிக்கவோ பார்க்கவோ முடியாமல் , ராசு குடும்பத்தார் வேலூர் அரசு மருத்துவமனை முன் கூட்டத்தில் கதறிக்கொண்டிருந்தார்.

good one. if it is OK with you, can I translate this into English and put it on my blog?
ReplyDeleteSure... You can use.. If you wish, add my blog id in that post. Also give me your twitter id and blog address
Delete- Vijay