Pages

Friday, June 29, 2012

இலையுதிர் காலம்

இரண்டு நாட்களுக்கு முன்... ஒரு இலையுதிர் காலம் ....

"எனக்கு மனசு விட்டு அழனும் போல இருக்கு ...ஆனா  அவங்க முன்னாடி நானே உடைஞ்சுட்டா அவங்க எங்க போவாங்க ... பாவம் யாமினி ... "

கார்த்திக் - மீடியா துறையில் நன்கு அறியபட்ட திறமையான புடைப்பட கலைஞன்.ஒரு பிரபல கல்லூரியில் ஆசிரியர், ஒரு முன்னணி பத்திரிக்கையின் துணை ஆசிரியர்.

ஜனனி - கார்த்திக் யாமினியோட ஒரே மகள், 7-ஆம் வகுப்பு. கார்த்திக் போலவே போட்டோகிராப்பியில் ரொம்ப ஆர்வம் அவளுக்கு.

ஜனனியின் கனவிலேதான் வாழ்ந்தார்கள் கார்த்திக்கும் யாமினியும் ...

"ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட்டா, என்ன விட பெரிய ஆளா வரணும் அப்படிங்கறதுதான் அவளோட கனவு... இப்போவே என்னோட போட்டோஸ்ல கரெக்ஸன்ஸ்லாம் சொல்வா ... ரொம்ப சுட்டி ... அவள ஒரு மினி ஜீனியஸ்-னு அவங்க மிஸ் கூட போன வாரம்தான் சொன்னாங்க ... "

அவன் மெல்ல அந்த உதிர்ந்த இலைகளின் இடையே ஊர்ந்து நடத்து கொண்டிருந்தான் .மேலே உள்ள மரங்களை பார்த்தான் ...
"கொட்டுற இந்த இலை இன்னும் ஆறு மாசத்துல தழஞ்சுடும் ஆனா ஜனனியோட..."


அவன் எண்ணங்களுக்கு அணை போட்டது அந்த அலைபேசி அழைப்பு ...

"சொல்லுங்க டாக்டர்"

"இதோ பக்கத்துல தான் இருக்கேன் , உடனே வரேன் டாக்டர் "

 *****
சில நாட்களுக்கு முன் ... திருச்செந்தூரில் ...

"அப்பா அப்பா அந்த கண்ணாடி வேணும்பா "
"டேய் அது பொம்ம கண்ணாடிடா "
"பரவால்லப்பா வாங்கி குடுப்பா "
"டேய் வேலா, உனக்கு நான்வேற நல்ல கண்ணாடியா வாங்கி தரேண்டா"
"போறப்போ கேட்டா, சாமி கும்புட்டு வர்றப்போ வாங்கி தரேன்னு சொன்ன இப்ப அப்பறம் வாங்கி தரேன்னு  சொல்ற ..."

"அம்மா அம்மா", என காயத்ரியிடம் ஓடினான்...
தமிழரசனின் நிதி நிலைமை அறிந்த காயத்ரி, "வேணாம் கண்ணா... அந்த கண்ணாடி எல்லாம் போட்டா கண்ணு கேட்டு போய்டும்டா"

வேலன் - தமிழரசன் காயத்ரியின் மூத்த மகன். இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேண்டிய பின் பிறந்ததால் அவனுக்கு வேலன் என பெயர் வைத்து, வருடா வருடம் பள்ளி விடுமுறையில் வருவதை வழக்கமாய் கொண்டவர்கள்.

இவர்கள் வசிப்பது திருநெல்வேலி அருகே , தாழையூத்து. இருவருக்கும் அங்கே உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் வேலை, வீடும் அருகேதான் . சொந்த ஊர் ஈரோடு அருகில் ... பிழைப்புக்காக இங்கே வந்தவர்கள்.

"சீக்கிரமா நடடா, ராத்திரிக்குள்ள வீடு போய் சேரணும்... பஸ்சு நிக்குது பாரு ...", வேலனை இழுத்து கொண்டு வேகமாய் நடந்தால் காயத்ரி.

*****
இன்று ...

"ரொம்ப நன்றி டாக்டர், இவ்ளோ சீக்கிரம் எல்லாம் நல்லபடியா முடியும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல ", நிம்மதியாய் டாக்டர் அறையிலிருந்து வெளியே  வந்தார்கள் கார்த்திக் யாமினி...
வெளியே கார்த்திக்கின் பாஸ் நின்றுகொண்டிருந்தார் .. மலேசியா சென்றிருந்த அவர் இப்பொழுதுதான் வருகிறார்.
"ஆப்பரேசன் முடிஞ்சுதா கார்த்திக்"
"நல்லபடியா சார் "
"எப்படி கார்த்திக் ஆச்சு "
"ஸ்கூல்ல எதோ டிராமா ப்ராக்டிஸ்... இவளுக்கு பாரினர் வேடம்னு சொல்லி கூலிங்கிளாஸ் குடுத்துருக்காங்க ... போட்டுகிட்டே ஓடிருக்கா... அப்போ கீழே விழுந்தது கண்ணாடி ஒடிஞ்சு பீசஸ்லாம் கண்ண ஸ்பாயில் பண்ணிடுச்சு.. "
"சின்ன பொண்ணு பாவம்"
"கடவுள் புண்ணியத்துல இந்த Eye Transplantation நல்லபடியா முடிஞ்சுடுச்சு"
"கொஞ்ச நேரம் கரண்ட் இல்லைனாவே நம்மாளா முடியல, பாவம் அஞ்சு நாள் ரொம்ப கஷ்ட்டபட்டுருப்பா..."
"ஆமா சார், எங்களுக்கும் இந்த அஞ்சு நாள் இருட்டாதான் இருந்துச்சு"

*****
சில நாட்களுக்கு பின்...

"சொல்லுங்க கார்த்திக்"
"சார், ஜனனிக்கு ஐ டொனேட் பன்னவங்க அட்ரஸ் கெடச்சுடுச்சு. பொதுவா, யாரு தந்தாங்க யாருக்கு போனதுன்னு சொல்லமாட்டாங்க. டாக்டர் என் கிளோஸ் பிரண்டுஅதனால் நான் ரொம்ப கேட்டதால கண்டுபிடிச்சு குடுத்தார். நானும் யாமினியும் நேர்ல போய் அவங்கள பாத்துட்டு வரலாம்னு இருக்கோம், அதான் ரெண்டு நாள் லீவ் கேக்காலம்னு.."
"கண்டிப்பா "
"நாளைக்கு காலைல கெளம்பறோம் சார்"
"ஆமா எங்கன்னு சொன்னீங்க"
"திருநெல்வேலி பக்கத்துல, தாழையூத்து..."

******
தமிழரசன் வீடு, தாழையூத்து ....

"நீங்க நன்றி சொல்ல இவ்ளோ தூரம் வந்ததே பெருசுங்க, பணம் எல்லாம் ஏதும் வேண்டாம்"
"இதுல பத்து லட்சம் இருக்குங்க வெச்சுக்கோங்க..."
"வேணாம்ங்க..அந்த முருகன் குடுத்த புள்ளதான் எங்க வேலன். போன வருஷம் திருச்செந்தூர் கோயிலுக்கு போயிட்டு வரப்போதான் அவனுக்கு அப்படி ஆச்சு...பஸ்ல வரும் போது மூச்சி விட முடியலன்னு சொல்லிட்டே மயங்கி விழுந்தான். 
அப்பறம் நெறைய டெஸ்ட் எடுத்தாங்க, இந்த சிமென்ட் தூள் அவன் நுரையீரல பாதிச்சுடுச்சுன்னு சொன்னாங்க, ஏதேதோ வியாதி பேர் எல்லாம் சொன்னாங்க... ஒண்ணும் புரியல...
காப்பாத்த நெறைய செலவு ஆகும்னாங்க... என் சக்திக்கு முடிஞ்ச வரைக்கும் கடனை எல்லாம் வாங்கி போராடினேங்க... ஆனா முடியல...

உசுர குடுத்து கூட காப்பாத நாங்க ரெடி ஆனா குடுக்கற உசுருக்கு யாரு காசு தர்றா..
உசுர குடுக்கறேன்னா காசு கெடைக்காது, ஆனா உசுர காப்பாத்த விலை வெக்கறாங்க...
உசுர காப்பாத்துற மருந்து இருக்கு, என்ன பண்ணும்னு அறிவு இருக்கு, ஆனா காசில்லதவங்க உசுர காப்பத்தணும்னு யாருக்கும் மனசு இல்லைங்க...

இவன் போனதுக்கு அப்பறம் நெறைய பேர் வந்து சொன்னாங்க, இங்க ப்ரீயா பண்றாங்க அங்க பண்றாங்கன்னு... ஆனா படிக்காதவங்க நானு, அப்போ ஒண்ணும் தெரியல ஒண்ணும் புரியல...
இன்னும் மூணு மாசம்தான் இங்க கான்ட்ராக்ட், அது முடிஞ்சதும் இந்த ஊரே வேணாம்னு சொந்த ஊருக்கே போய்டுவோங்க, மீதி இருக்க இந்த இன்னொரு புள்ள உசுரயாவது காப்பாத்தனுங்க "
"சரிங்க அந்த பயனுக்காவது இது ஆகட்டுங்க..."
இந்த பணம் இருந்திருந்தா எங்க வேலன நாங்க அப்போவே காப்பாத்திருப்போம்.... இப்போ இந்த பணம் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி, எங்க வேலன் ஸ்கூலுக்கு வந்து, கண் தானத்த பத்தி யாரோ சொல்லிருக்காங்க. அப்போதான் அவன் வந்து அடம் பண்ணி அவனோட கண்ண தானம் பண்ண பதிவு பண்ணுனான், எங்களையும் பண்ண வெச்சான்.
நீங்க வேணா ஒண்ணு எங்களுக்காக செய்யுங்க, உங்களுக்கு ரெண்டு கண்ணு கெடச்சதுன்னா நீங்க நாலு கண்ணா குடுக்கலாமே..."


*****
திரும்பும் வழியில் ...

"படிச்சவங்க , நாம நல்லா இருக்கணும்னு நெனைக்கறோம் , படிக்காதவங்க , யாரவது நல்ல இருக்கட்டும்னு நெனைக்கறாங்க , இதான் யாமினி அவங்களுக்கும் நமக்கு வித்தியாசம்"

அவன் சொல்வதை காதில் வாங்காமல் அவள் மனது Eye Bank காண்டாக்ட் நம்பர் யாரிடம் வாங்கலாம் என எண்ணி கொண்டிருந்தது .

*****

2 comments:

  1. very nice story - simple story with a great impact - sudha

    ReplyDelete
  2. Engeyum Eppodhum pada feel irukku... Great eluthalare :)

    ReplyDelete