இதுவரைக்கும் இப்படி ஆனதே இல்ல.. எப்பவும் நாங்க எல்லாரும் சேந்துதான் போவோம் வருவோம்.. ஆனா திடீர்னு ஒரு புயல் மாதிரி...
அப்பறம் என்ன ஆச்சுன்னே தெரியல, இப்ப நான் மட்டும் தனியா இப்படி அலையுறேன். அனேகமா நான் மயங்கிட்டேன்னு நெனைக்கறேன் இல்லைனா மயக்கத்லையே இங்க நடத்து வந்துருப்பேன். இந்த எடமே எனக்கு புதுசா இருக்கு... இதெல்லாம் நான் பாத்ததே இல்ல...
இருங்க.. இருங்க.. எங்கயும் போகாதீங்க... தனியா இருக்க பயமா இருக்கு. நான் மத்தவங்கள கண்டுபுடிக்கற வரைக்கும் என் கூட இருங்க... ப்ளீஸ்...
இந்த எடம் ஒரே இருட்டா இருக்கு, எதோ பழைய புக்கு வாசனை எல்லாம் வருது... இன்னும் எவ்ளோ தூரம் இப்படி இருட்டுலே நடக்கனும்னு தெரியல... எங்க ஆளுங்க யாரவது ஒருத்தர பாத்தா கூட அவங்க கூடவே நான் வீட்டுக்கு போய்டுவேன்.
வெளிச்சமே இல்ல, என்ன எடம்னு கூட தெரியல... ராத்திரி ஆகிடுச்சோ. வீட்ல எல்லாரும் நான் இன்னும் வரலைன்னு கவலையா இருப்பங்க.. அப்பாவும் அண்ணனும் இந்நேரம் என்ன தேடிட்டு இருப்பாங்க.. பாவம் எல்லாரும்... ம்ம்ம்.. நானும்தான்... ஆனா எப்படியும் காலைலக்குள்ள வீட்டுக்கு போய்டுவேன்னு நெனைக்குறேன்... நாமலே செம கருப்பு, இந்த இருட்டுல அவங்க எப்படி என்ன கண்டுபுடிப்பாங்க....
அட அங்க ஏதோ வெளிச்சமா இருக்கு... கூடவே வாங்க.. வேகமா ஓடலாம்.. அடடா சூரியவெளிச்சம், எப்படியோ இருட்டான எடத்துல இருந்து தப்பிச்சிட்டோம்.. ஆனா என் கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் யாரையுமே காணமே.. இன்னும் கொஞ்ச தூரம் போயி பாக்கலாம்...
ரொம்ப நேரமா அலையுறேன் ஒருத்தரும் கண்ணுல படல... அவங்கள விட்டு ரொம்ப தூரமா வந்துட்டனா.. அவ்ளோதானா.. எனக்கு அழுகையே வர்ற மாதிரி இருக்கே...
அங்க ஒரு மேடு மாதிரி தெரியுது அதுக்கு அந்த பக்கம் போயி பாக்கலாம் வாங்க... கொஞ்சம் தூரமா இருக்கு வேகமா ஓடினா சீக்கிரமா போய்டலாம்... இந்த குண்டு ஒடம்ப வெச்சிக்கிட்டு ஓடுறதே கஷ்டம்தான், அதனால் நீங்களே 'ஓட ஓட ஓட தூரம் கொறயல' பாட்டு பாடுங்க, சிச்சுவேசனுக்கு கரெக்டா இருக்கும்.
ஹப்பாடா வந்தாச்சு ... எங்க....
ஹே.. தோ... அங்க... அதோ அங்கதான் எல்லாரும் போறாங்க பாருங்க...
ஹையா... கண்டுபுடிச்சிட்டேன்...ஹேய்ய்ய்யய்ய்ய்.... நான் வர்றேன்.. டாட்டா...
டேய்... டேய்... நில்லுங்கடா.. நானும் வரேண்டா...
டேய்... டேய்... நில்லுங்கடா.. நானும் வரேண்டா...
** THE END **
ரொம்ப நன்றிங்க, நம்ம ஹீரோ, கட்டெறும்பு, அவங்க கூட்டத்தோட சேருற வரைக்கு கூட வந்ததுக்கு. இந்த வீட்டுக்காரம்மாதான் ஹிட் அடிச்சி எல்லாரையும் கொல்ல பாத்துச்சி, ஆனா நம்ம ஹீரோ தப்பிச்சுட்டார்..
இந்நேரம் அவர் குடும்பத்தோட.. லா லாலா லாலா லலலல லா லா ...
No comments:
Post a Comment