Pages

Tuesday, January 24, 2012

ஒரு முறை .. ஒரே ஒரு முறை .. [Part 2]

இடம்: Le Bonheur
நாள்: செப்டம்பர் 3, 2011

"அம்மா.. அம்மா.."

கால்கள் செருப்பை கழட்டி விட, கைகள் சாவியை ஆணியில் மாட்ட,
கண்கள் அம்மாவை தேட,  வாய் அப்பாவை திட்ட,  வேகமாய் உள்ளே வந்தால் பார்வதி.
"இந்த வண்டியில லைட்ட மாத்த சொல்லி நானும் மூணு நாளா
சொல்லிக்கிட்டு இருக்கேன். நான் இருட்டுல எங்கயாவது
உழுந்தாதான் மாத்துவாங்களா".
"நேத்தே வாங்கியாந்துட்டாங்கமா, மாத்த மறந்துருப்பாங்கன்னு நெனைக்கறேன்"
"ஓ, சரிம்மா. காலையில நானே ஞாபகப்படுத்துறேன்".
இரண்டாய் உடைந்த கொய்யாப்பழமாய்  இருந்த கன்னங்கள், தாயை கண்டதும், திரியாத பாலாய்  மாறியது.

சீரியல் சன் மியுசிக்கிற்க்கு மாறியது. "இவ வந்தாலே ஒரு சீரியலும் பாக்கமுடியாது". வசனமாவது கேட்டுகொண்டே வேலைகளை
செய்துகொண்டிருந்த  மீனாட்சி மனசுக்குள்ளேயே நினைத்து கொண்டாள்.
அந்த சேனலில் விளம்பரம் ஓடவே, அதற்குள் மற்ற அனைத்து சேனல்களுக்கும் ரிமோட் தீபாராதனை காட்டிவிட்டு மீண்டும் இதே சேனலில் வந்து நின்றது. இப்போது,
"யானை தந்தத்தின் சிலை நீயே.. ஏறும் தங்கத்தின் விலை நீயே.. காதல் வீசிய மலை நீயே.. எனை கட்டி இழுத்தாயே ..."

அதற்குள் வாய் ஏதாவது கொறிக்க நினைக்க, ஆறாம் நொடியில் பிரிட்ஜ்-ன் முன் நின்றாள்.  அங்கே ஏதும் இல்லாததால், நேத்து சுட்ட வடைஒன்றை மட்டும் கடித்து கொண்டே வந்து தொடர்ந்தாள். இப்பொழுது,
"வேறென்ன வேண்டும் உலகத்திலே.. இந்த ஜென்மம் போதும் நெஞ்சினிலே... ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்... " பாடல் ஓட, அவள் மூளையில்,
 "கண்ணாடி நீ... கண்ஜாடை நான்.. " ஒடியது. இரண்டு நாள் முன்தான் இப்படத்தை ரசித்து பார்த்தாள் .

திடீரென ஏதோ நினைவு வந்தவளாய் ...
"ஏம்மா, அத்த இன்னிக்கி வரலியா."
"சாயந்தரம்தான் வந்தாங்க, கருவேப்புல கொத்து ஓடிச்சிட்டு போனாங்களே..."
"சரிம்மா..." என கூறிக்கொண்டே தன் அறையில் நுழைந்தால் பார்வதி.
ஆனால் தினமும் அவ மண்டைய கொடயுற அதே கேள்வி இன்னைக்கும்...

"அப்போ இன்னுமா இந்த நந்தா பய மருந்து குடிக்கல...", என மனசுக்குள்ளேயே நினைத்து லேசாய் சிரித்தாள்.

[தொடரும்...]

இந்த நந்தா யாருன்னு தெரியனுமா இங்க பாருங்க - PART 1

No comments:

Post a Comment