Day 1: Jan 19 2012, 8.30 AM
"எந்தவொரு சரித்திர நாளும் சாதாரணமாகத்தான் விடியும்"
"எந்தவொரு சரித்திர நாளும் சாதாரணமாகத்தான் விடியும்"
அன்றும் அப்படித்தான் எப்பவும் போல விடிந்தது அவனுக்கு, காலை 8 மணிக்கு. அதே டீ கடை வாசல், இரண்டு கைகளிலும் புகையுடன், மதன். ஒரு கையில் சூடான டீ , இன்னொரு கையில் சிகரெட்.
இன்றுதான் அவன் முதல் முறையாக அவளை பார்க்கிறான்.
Day 6: Jan 24 2012, 10 PM
"நாந்தாங்க மதன். என் சொந்த ஊரு மேட்டுப்பாளையம், இங்கதான் பக்கத்துல ஒரு கம்பனில குவாலிட்டி இஞ்சினியரா இருக்கேன். நான் ரொம்ப சிம்பிளானவன், ஆனா பிரண்ட்ஸ் எல்லாரும் தான் என்னை 'என்ன ஆர்யான்னு நெனப்பா'-ன்னு ஓட்டுவாங்க, ஆனா நான் அவருக்கெல்லாம் காம்ப்பட்டீஷன் இல்லைங்க. எனக்கு ஒரு ரூம் மேட், ஒரே ரூம் மேட், வசந்த்.ஆனா இவன் சந்தானம் மாதிரிதான், கொஞ்சம் ஏமாந்தா கழுவி ஊத்திடுவான். அவன்கிட்டதான் இன்னைக்கு அவளை பத்தி சொல்லலாம்னு இருக்கேன், ஒரு வாரம் ஆச்சு ஏன் சொல்லலைன்னு கேப்பான், எதாவது சொல்லி சமாளிக்கணும். இன்னைக்குன்னு பாத்து லேட்டா வரானாம். நாளைக்கு அவன் ஊருக்கு போனா, 5 நாள் கழிச்சுதான் வருவான். அதுக்குள்ளே சொல்லிடனும், பாவம். அப்பறம் சொன்னா ரொம்ப கோவிச்சுப்பான்"
Day 6: Jan 24 2012, 11.30 PM
" டேய் என்னடா எதோ முக்கியமான விஷயம் இன்னைக்கு பேசணும்னு சொன்ன.. ஹவுஸ் ஓனர் வீட்ட காலி பண்ண சொல்லிட்டானா "
" டேய் போன வியாழக்கிழம என்ன நடச்சுன்னா, காலைல நம்ம கடையில தம் அடிச்சுட்டு இருந்தேண்டா .. அவள தூரத்துல பாத்தேண்டா .... மொத தடவ .. லேவண்டர் கலர் சல்வார்... தூரத்துல எதோ Puzzle மாதிரி தெரிஞ்சாடா... கிட்ட வர வர அந்த Puzzle தானா சால்வ் ஆகுற மாதிரி இருந்தது.. அவ என்ன கிராஸ் பண்றப்போ அப்படியோ புல்லா
Answer கெடச்சா மாறி இருந்துச்சுடா.... என் வாழ்க்கைக்கே Answer கெடச்சதுடா..."
"மைதிலிடா... டிஸ்டர்ப் பண்ணாம முழுசா கேளுடா... "
"சொல்லு..."
"அவ என்ன கிராஸ் பண்ணுனத அப்படியே ரீவைண்ட் பண்ணி, மறுபடி மைன்ட்-ல பிளே பண்ணினேன் .. பூப்போல்.. பூப்போல்... என் நெஞ்சை கொய்தவள்... பாட்டு மியுசிக்கோட ஓடுதுடா.."
"ஹாரிஸ் ஜெயராஜ் பேக்-கிரவுண்ட் மியுசிக்... உனக்கு... ம்ம்ம்ம்... அப்பறம் சொல்லு..."
"அப்பறம் டெய்லி நான் அதே டைம்-க்கு அங்க போய்டுவேன்.. ஆனா அவ டைம் மாறி மாறிதான் வந்தா... என்ன இருந்தாலும் மிஸ் பண்ணாம அந்த மிஸ் கண்ணுல படனும்ல... ஆமாடா அவ ஸ்கூல்
மிஸ் .... பசங்க படத்துல வர்ற சோபிக்கண்ணு மாதிரி இருக்கும்னு ஒரு நாள் ஸ்கூல் - க்கே போயிட்டேன்டா, குட்டீஸ் கிளாஸ் எல்லாம் தேடுனேன், அங்க இல்ல .. ஒரு வேள காக்க காக்க மாயா டீச்சர் மாதிரி இருப்பான்னு 10th கிளாஸ் போயி பாத்தா அதுவும் இல்ல ..."
"டேய் .. நிறுத்து... அடுத்தது கடலோர கவிதைகள் ஜெனிபர் டீச்சர் மாதிரி டுடோரியல் கிளாஸ் எடுக்கரவ-னு சொன்னீன்னா செருப்பு பிஞ்சுடும் ... உன் கதைய கேக்குறதே பெருசு, இதுல ஊர்ல இருக்கற சினிமா கதையெல்லாம் எதுக்குடா ... ஒழுங்கா சொன்னா சொல்லு, இல்ல என் வேலைய பாக்க போறேன்..."
"உன் வேலையே அடுத்தவன் கதைய கேக்குறதுதான, புதுசா என்ன வேல உனக்கு"
"டேய் கோவம் வந்தா நான் கெளம்பிடுவேன்டா"
"டேய் நைட் 11 .30 மணிக்கு நீ எங்கடா கெளம்புவ.."
"தெரியுதுல்ல மணி ஆகுதுன்னு.... சாவடிக்காதடா .. சொல்லி தொலடா ..."
அதுக்கப்பறம் நான் எவ்ளோ நேரம் சொன்னேன், அவன் எவ்ளோ நேரம் கேட்டான்னே தெரியல... அப்படியே தூங்கிட்டோம், முழிச்சு பாத்தா விடிஞ்சுடிச்சு... அவன் ஆள காணோம்...
"சரி இனி நானே டீல் பண்ணிக்கிறேன்னு முடிவு பண்ணிட்டேன். அவள எனக்கு புடிக்கறதுக்கு எந்த காரணமும் இல்ல, ஆனா யாராவது கேட்டா இத சொல்ல முடியுமா..ஏன் அவளே கேட்டா கூட நான் என்ன சொல்றது .. அதான் அவள பாலோ பண்ணி அவ கிட்ட இருக்கற நல்ல கேரக்டர்ஸ் எல்லாம் கண்டுபிடிச்சு, நானே காரணம் உருவாக்க முடிவு பண்ணிட்டேன்."
Day 15: Feb 2 2012, 5 PM
"ரெண்டு வாரம் மைதிலி பின்னாடி அலைஞ்சு நான் கண்டுபுடிச்ச... இல்ல எனக்கு புடிச்ச விஷயம்...
மார்க்கெட்ல நெறையா பேர் இருந்தும், தினமும் அந்த வயசான பாட்டிக்கிட்டதான் பூ வாங்கி தலையில வெச்சிக்கறா ... வயசானவங்க நல்லா இருக்கட்டும்னு நல்ல எண்ணம்...
கோவில்ல கண்ண மூடி சாமி கும்பிடும் போது வாய் திறக்காம உதடு மட்டும் சாமிகிட்ட பேசுறது ரொம்ப அழகா இருந்தது...
தினமும் அவங்க ஸ்கூல் வாட்ச்மென் தாத்தாவ சாப்டீங்களா-ன்னு கேப்பா
போன் எடுத்ததும் ஹலோ சொல்லாம 'சொல்லுங்க'-னு சொல்றது...
இன்னொரு முக்கிய விஷயம், அவளும் என்னை மாதிரி நெறைய சினிமா பாக்குறா
இன்னும் நெறையா விஷயம் புடிச்சிக்கிட்டே இருந்தது...
இதுல இன்னொன்னு என்ன தெரிஞ்சுதுன்னா எனக்கு புடிக்காதது ஒரு தனி லிஸ்ட வருது ... ஆனா அதெல்லாம் விடுங்க... அதுவும் நல்லதுதான்... அதெல்லாம் ஒண்ணொண்னா திருடா திருடி சாயா சிங் மாதிரி மாத்திக்க சொல்லிடலாம்.
சரி, இந்த வசந்த் பயன்கிட்ட இத காமிச்சு பெஸ்ட் எல்லாம் செலக்ட் பண்ணனும்"
Day 20: Feb 7 2012, 6.30 PM
இதற்கிடையில் மைதிலியும் இவன் தொடர்வதை கவனித்துவிட்டாள். அவளும் இவனுடைய நெம்பரை யாரிடமோ வாங்கி போன் செய்தாள்.
" நானும் பாத்துருக்கேன் உன்ன... என் பொறந்த நாள் அன்னைக்குதான் உன்ன மொதல்ல பாத்தேன் ... அந்த பொட்டி கடைல தம் அடிச்சிட்டு நின்னுட்டு இருந்த... நீயும் என்ன பாத்த, எதோ பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பாத்த மாதிரி ... அப்புறம் ரெண்டு வாரம் பின்னாடியே பாலோ பண்றது... ஸ்கூல்க்கு வந்து எட்டி பாக்குறது .. எனக்கு இதெல்லாம் பிடிக்காது... அப்பறம் போறப்போ வரப்போ கொரங்கு சேஷ்ட பண்றது... நீ என்ன இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணறேன்னு தெரியுது.. உனக்கு இது தான் வேலையான்னு எல்லாம் எனக்கு தெரியாது ஆனா எனக்கு இது தேவை இல்லாத வேலை"
வேகமாய் சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்தாள்.
"என்ன இவ எங்கேயும் எப்போதும் அஞ்சலி மாதிரி பேசுறா... அவ பொறந்த நாள் எல்லாம் எதுக்கு சொல்றா ... பரவால்ல.. ஆனா நல்லவேளை என்னை புடிக்கலைன்னு சொல்லல.. அவளும் இப்போ நம்மள பாக்குறா.. இனி நான் எந்த கொரங்கு வித்தையும் பண்ண தேவையில்ல. நிச்சயமா அவ என்ன இனிமேல் கவனிப்பா ..."
Day 21: Feb 8 2012, 11 PM
"என்னடா எழுதுற இந்நேரத்துல ... ", வசந்த்.
"Valentine's Day வரதுக்குள்ள அவள ஒகே சொல்ல வெக்கணும், அதான் டிரை பண்ணுறேன்... இந்த வருஷம் அவ கூடத்தான் Valentine's day கொண்டாடனும்.. "
"டேய் Valentine's Day எதுக்குன்னா.. இப்ப லவ் பண்ற பொண்ணு கூட கொண்டாடுறதுக்கு இல்ல... இதுக்கு முன்னாடி நாம லவ் பண்ணுன பொண்ணுங்க எல்லாரையும் நெனச்சு பாக்கத்தாண்டா ...."
"என்ன ஆட்டோகிராப்-பா "
"சேரன் நல்லவர்டா... மூணு மணி நேரத்துல படம் முடிஞ்சுடுச்சு... நம்ம ஆட்டோகிராப்-லாம் எடுத்தா மூணு நாள் ஓடுமேடா..."
"வேணாம் ஓடி போய்டு கடிச்சு வெச்சுடுவேன்..."
Day 22: Feb 9 2012, 5 PM
அவள் பள்ளிக்கு செல்லும் வழியில்...
"இதென்ன டைரி , டெய்லி நீங்க என்னை பத்தி எழுதுனதா..."
"இல்ல.. ஒரே நாள்ல எழுதுனது , என்னை பத்தி ... எனக்கு உன்ன பத்தி நெறைய தெரியும் ஆனா உனக்கு என்னை பத்தி ஒண்ணுமே தெரியாது. இதுல என்னை பத்தி நெறைய எழுதிருக்கேன், உனக்கு என்னை பத்தி எப்ப தெரிஞ்சிக்கணும்னு தோணுதோ அப்போ படி...
நானும் பாத்துருக்கேன்... நான் பாக்கறப்போ நீ அழகா தெரியணும்னு நெனைக்கற, நெறைய தடவ அத நான் நோட் பண்ணிருக்கேன்... நான் உன்ன கவனிக்கனும்னு நீயும் எதாவது பண்ணுவ, ஆனா நான் பாக்குறப்போ பாக்காத மாதிரி நடிப்ப.. ஏன் நடிக்கற...
உனக்கு என்ன பிடிக்காம வெறுக்கல, பிடிச்சுடகூடாதுன்னு வெறுக்கற .. இல்ல... இல்ல... வெறுக்கற மாதிரி நடிக்கற..."
"ஹலோ இந்த விக்ரமன் பட டயலாக் எல்லாம் இங்க வேண்டாம், கெளம்புங்க.." திரும்பி பார்க்காமல் நடந்தாள் அவள்.
சிறிது தூரம் சென்ற பின்தான் உணர்ந்தாள், அவன் தந்த டைரி அவள் கையில்... "இந்த குப்ப தொட்டியில போட்றலாமா.. வேணாம் அவன் பாத்துட்டான்னா.. பாவம்... "
Day 25: Feb 12 2012, 9 AM
"ஐயோ இன்னும் ரெண்டு நாள்ல பிப்ரவரி 14 வேற வருது, இந்த மதன் ஏதாவது லூசு மாதிரி ட்ரை பண்ண போறான். அவனும் உருப்படாம, நம்மளையும் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு ... இன்னைக்கு இதுக்கு ஒரு எண்டு கார்டு (End Card) போட்டு கதைய முடிச்சுட வேண்டியதுதான் ..."
"ஒரு அஞ்சு நிமிஷம் அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு, அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணி தொரத்திட வேண்டியதுதான்."
Day 25: Feb 12 2012, 5 PM
SMS தட்டினால், "Come to coffe day near race course raod thomas park at evening 5 today"
"ஒரு அஞ்சு நிமிஷம் அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு, அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணி தொரத்திட வேண்டியதுதான்."
Day 25: Feb 12 2012, 5 PM
"இங்க பாரு மதன் எனக்கு நேரம் இல்ல... உனக்கு அஞ்சு நிமிஷம்தான் டைம், அதுக்குள்ளே என்ன சொல்லணுமோ சொல்லு."
"மைதிலி, இந்த அஞ்சு நிமிஷத்துல நான் உன்ன காதலிக்கறேன்னுதான் சொல்ல முடியும், ஆனா அத நீ புரிஞ்சிக்க ஆயுசு முழுக்க என் கூட இருக்கணும். உன் வாழ்க்கையில குறுக்க வந்தவனா நான் இருக்க கூடாது, கடைசி வரைக்கும் உன் கூட வர்றவனா இருக்கணும்."
சொல்லிவிட்டு திரும்பி நடந்தான் ....
திடீரென நின்றவன் திரும்பி, "உன்னோட மீதி மூணு நிமிஷத்த உன்கிட்டையே குடுத்துட்டேன்" என கூறி, தன்னை ஒரு விக்ரமன் பட ஹீரோ போல நினைத்துக்கொண்டு, மீண்டும் நடந்தான் .
மனதுக்குள் பாரதிராஜா குரலில், "அவன் பதிலை எதிர்பார்க்கவில்லை... ஒரு குறுக்கெழுத்து புதிரின் முதல் எழுத்தை நிரப்பி விட்ட திருப்தியுடன் திரும்பினான்" என பேசிக்கொண்டான்.
அவளோ, "நல்லாத்தான் பேசறான்.. நல்லவனாதான் இருக்கான்... இன்னைக்கு அந்த டைரிய படிச்சடலாமா... காரணம் கண்டுபுடிக்கனும்ல... எத்தன நாள்தான் அவன அலையை விடுறது... பாவம்..." என நினைத்து மனதுக்குள்ளேயே சிரித்து கொண்டாள்.
அப்படியே அவன் செல்ல செல்ல இவள் மனதில் பாடல் ஓடியது... மதனா மதனா மன்மதனா எனை மடக்கிய மந்திரனா ...
அப்படியே அவன் செல்ல செல்ல இவள் மனதில் பாடல் ஓடியது... மதனா மதனா மன்மதனா எனை மடக்கிய மந்திரனா ...
கதைய முடிக்க வந்தவள, இப்படி கவிதையாக்கிட்டானே.... இவன் வெறும் மதன் இல்ல மன்மதன்தான்.
இனி என்ன.... டூயட் தான்... "தன்னே தர்ரனானே தானானே"...
-- முற்றும் --
Adade ungalukku ulla ippdai oru kadhasiriyar ... super
ReplyDelete