கடல் அலைகள்
டிசம்பர் 30 , 2004 காலை ஏழு மணி
"ஹலோ விக்ரம்"
"சொல்லு பவானி"
"இல்ல இன்னைக்கு ஒரு கனவு... நேர்ல சொல்றனே"
"என்ன ஆச்சு?"
"நேத்து நைட்டு சுனாமி நியூஸ் எல்லாம் பாத்துட்டு அப்படியே தூங்கிட்டேன், கனவுல வெறும் பினங்களா செத்து மிதக்கற மாதிரி வந்தது"
"அது நியூஸோட எபெக்ட். சும்மா கவலைபடாம நீ காலேஜ் கிளம்பு "
"அப்படி இல்ல, அதுல நீங்களும் இருக்கற மாதிரி வந்தது, அதான் ஷாக் ஆகி எழுந்திட்டேன், ஐஞ்சு மணில இருந்து தூக்கமே இல்ல, இப்போதான் நீங்க முழிச்சிருப்பீங்கன்னு கால் பண்ணினேன்"
"அதெல்லாம் சீரியஸா எடுத்துக்காத, விடிய காலைல கெட்ட கனவு வந்தா நல்லதுன்னு சொல்லுவாங்க"
"எதோ மனசு உருத்தலாவே இருக்கு"
"அத்தைய நல்லா சூடா காபி போட்டு தர சொல்லி குடி, எல்லாம் பறந்துடும்"
"சரி காலேஜ் முடிஞ்சதும் நாம மீட் பண்ணலாம், உங்களுக்கு ஈவினிங் வொர்க் ஏதும் இல்லையே"
"இருக்காது.. இருந்தா நான் SMS பண்றேன் "
"ஹலோ"
"சொல்லு பவானி"
"எங்க இருக்கீங்க"
"இங்க பீச்ல"
"வாட்....."
"ஆமா ஒரு 'போஸ்ட் சுனாமி' ரிப்போர்ட் தரனும், அதான் இங்க இருக்கேன்."
"நான் காலையிலேயே என்ன சொன்னேன்"
"சுனாமி வந்து ஒரு வாரம் ஆகுது, நீ பயப்படற மாதிரி இங்க ஒண்ணும் ஆகாது. நீ வேணா வாயேன் இங்க"
"மொதல்ல நீங்க அங்கிருந்து கெளம்புங்க"
"இன்னும் ஒரு ஒன் ஹவர், ஆறு மணிக்கு கெளம்பிடுவேன், எங்க வரணும்னு சொல்லு, வரேன்..."
"சரி கெளம்பறப்போ கால் பண்ணுங்க"
விக்ரம் தனியார் தொலைக்காட்சியில் நியூஸ் ரிப்போர்ட்டர்.
"ஹலோ பவானி, எங்க இருக்க"
"ஒரு பத்து நிமிஷம்.. கூப்புடுறேன்..."
"ஹலோ விக்ரம் எங்க இருக்கீங்க"
"இன்னும் பீச்லதான்"
"அது தெரியும் பீச்ல எங்க... நானும் இங்கதான் இருக்கேன்"
"இங்க எதுக்கு வந்த... சரி நான் காந்தி சிலை பக்கத்துல நிக்கறேன்"
"பைவ் மினிட்ஸ் வரேன்"
இவர்களுக்கு திருமணம் உறுதி செய்த நாள் முதல் இருவருக்குமான பொருத்தம் சரியாகவே போய்க்கொண்டுருக்கிறது.
"இங்க எதுக்கு வந்த, நான்தான் வரேன்னு சொன்னேனே"
"இல்ல எதோ காலைல இருந்து பயமாவே இருந்தது, நீங்க பீச்ல இருக்கறது தெரிஞ்சதும் பயம் இன்னும் ஜாஸ்தி ஆகிடுச்சு, அதான் நேர்லயே கெளம்பி வந்துட்டேன்"
"சரி வா டீ சப்ட்டுட்டே பேசலாம்"
இருவரும் நடந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.
அவள் சீக்கிரமாக இங்கிருந்து போகலாம் என சொன்னாலும் அவன் மனம் அந்த இடத்தை விட்டு அவ்வளவு சுலபாக வர விடவில்லை.
"ரெண்டு வாரம் முன்னாடி, இங்க என்ன நடக்க போகுதுன்னே தெரியாம சந்தோசமா பல மக்கள் இருந்த இடம்....
போன வாரம், இங்க வந்த யாருமே இப்போ இல்ல.
இதோ இப்போ இந்த வாரம், யாரும் வர்றதுக்கு பயப்படுற இடம்.
பத்து நாள்ல எப்படியெல்லாம் மாறிடுச்சு பாத்தியா"
"ஆமாங்க இயற்கையோட சக்திக்கு முன்னாடி மனித சக்தியெல்லாம் ஒண்ணுமில்லைன்னு நிரூபனம் ஆகிடுச்சு"
அப்பொழுதுதான் தூரத்தில் எதோ மின்னுவதை கவனித்தான் விக்ரம். அவனுக்கு அது என்ன என்று புரிந்தது. வேகமாய் அதனை அருகில் போய் கையில் எடுத்தான்.
மிகப்பெரிய போர் வாள். அதனை கையில் எடுத்ததுமே எதோ மின்னல் அவனுள் பாய்ந்ததை உணர்ந்தான், அதன் பின்னணி பற்றி துளியும் அறியாமல்.
டிசம்பர் 30 , 2004 காலை ஏழு மணி
"ஹலோ விக்ரம்"
"சொல்லு பவானி"
"இன்னைக்கு சாயந்தரம் மீட் பண்ணலாமா"
"ம்ம்ம்... ஒக்கே , எதாவது ஸ்பெஷல்?""இல்ல இன்னைக்கு ஒரு கனவு... நேர்ல சொல்றனே"
"என்ன ஆச்சு?"
"நேத்து நைட்டு சுனாமி நியூஸ் எல்லாம் பாத்துட்டு அப்படியே தூங்கிட்டேன், கனவுல வெறும் பினங்களா செத்து மிதக்கற மாதிரி வந்தது"
"அது நியூஸோட எபெக்ட். சும்மா கவலைபடாம நீ காலேஜ் கிளம்பு "
"அப்படி இல்ல, அதுல நீங்களும் இருக்கற மாதிரி வந்தது, அதான் ஷாக் ஆகி எழுந்திட்டேன், ஐஞ்சு மணில இருந்து தூக்கமே இல்ல, இப்போதான் நீங்க முழிச்சிருப்பீங்கன்னு கால் பண்ணினேன்"
"அதெல்லாம் சீரியஸா எடுத்துக்காத, விடிய காலைல கெட்ட கனவு வந்தா நல்லதுன்னு சொல்லுவாங்க"
"எதோ மனசு உருத்தலாவே இருக்கு"
"அத்தைய நல்லா சூடா காபி போட்டு தர சொல்லி குடி, எல்லாம் பறந்துடும்"
"சரி காலேஜ் முடிஞ்சதும் நாம மீட் பண்ணலாம், உங்களுக்கு ஈவினிங் வொர்க் ஏதும் இல்லையே"
"இருக்காது.. இருந்தா நான் SMS பண்றேன் "
பவானி, மெடிக்கல் காலேஜில் கடைசி வருடம் படிக்கிறாள். மிகப்பெரும்
மருத்துவராகி அதனை தொண்டாய் செய்ய சிறு வயது முதலே ஆர்வம் கொண்டவள்.
"ஹலோ"
"சொல்லு பவானி"
"எங்க இருக்கீங்க"
"இங்க பீச்ல"
"வாட்....."
"ஆமா ஒரு 'போஸ்ட் சுனாமி' ரிப்போர்ட் தரனும், அதான் இங்க இருக்கேன்."
"நான் காலையிலேயே என்ன சொன்னேன்"
"சுனாமி வந்து ஒரு வாரம் ஆகுது, நீ பயப்படற மாதிரி இங்க ஒண்ணும் ஆகாது. நீ வேணா வாயேன் இங்க"
"மொதல்ல நீங்க அங்கிருந்து கெளம்புங்க"
"இன்னும் ஒரு ஒன் ஹவர், ஆறு மணிக்கு கெளம்பிடுவேன், எங்க வரணும்னு சொல்லு, வரேன்..."
"சரி கெளம்பறப்போ கால் பண்ணுங்க"
விக்ரம் தனியார் தொலைக்காட்சியில் நியூஸ் ரிப்போர்ட்டர்.
"ஹலோ பவானி, எங்க இருக்க"
"ஒரு பத்து நிமிஷம்.. கூப்புடுறேன்..."
இன்னும் இரண்டு மாதங்களில் விக்ரமுக்கும் பவானிக்கும் திருமணம் நடக்கயிருக்கிறது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
"ஹலோ விக்ரம் எங்க இருக்கீங்க"
"இன்னும் பீச்லதான்"
"அது தெரியும் பீச்ல எங்க... நானும் இங்கதான் இருக்கேன்"
"இங்க எதுக்கு வந்த... சரி நான் காந்தி சிலை பக்கத்துல நிக்கறேன்"
"பைவ் மினிட்ஸ் வரேன்"
இவர்களுக்கு திருமணம் உறுதி செய்த நாள் முதல் இருவருக்குமான பொருத்தம் சரியாகவே போய்க்கொண்டுருக்கிறது.
"இங்க எதுக்கு வந்த, நான்தான் வரேன்னு சொன்னேனே"
"இல்ல எதோ காலைல இருந்து பயமாவே இருந்தது, நீங்க பீச்ல இருக்கறது தெரிஞ்சதும் பயம் இன்னும் ஜாஸ்தி ஆகிடுச்சு, அதான் நேர்லயே கெளம்பி வந்துட்டேன்"
"சரி வா டீ சப்ட்டுட்டே பேசலாம்"
இருவரும் நடந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.
அவள் சீக்கிரமாக இங்கிருந்து போகலாம் என சொன்னாலும் அவன் மனம் அந்த இடத்தை விட்டு அவ்வளவு சுலபாக வர விடவில்லை.
"ரெண்டு வாரம் முன்னாடி, இங்க என்ன நடக்க போகுதுன்னே தெரியாம சந்தோசமா பல மக்கள் இருந்த இடம்....
போன வாரம், இங்க வந்த யாருமே இப்போ இல்ல.
இதோ இப்போ இந்த வாரம், யாரும் வர்றதுக்கு பயப்படுற இடம்.
பத்து நாள்ல எப்படியெல்லாம் மாறிடுச்சு பாத்தியா"
"ஆமாங்க இயற்கையோட சக்திக்கு முன்னாடி மனித சக்தியெல்லாம் ஒண்ணுமில்லைன்னு நிரூபனம் ஆகிடுச்சு"
அப்பொழுதுதான் தூரத்தில் எதோ மின்னுவதை கவனித்தான் விக்ரம். அவனுக்கு அது என்ன என்று புரிந்தது. வேகமாய் அதனை அருகில் போய் கையில் எடுத்தான்.
மிகப்பெரிய போர் வாள். அதனை கையில் எடுத்ததுமே எதோ மின்னல் அவனுள் பாய்ந்ததை உணர்ந்தான், அதன் பின்னணி பற்றி துளியும் அறியாமல்.
[பகுதி 2 - நினைவலைகள்]
[பகுதி 3 - பயணம் ]
Serial la next episode kaaga viewers a wait panna vaikura maadhiri... Next part kaaga eager a wait panna vachchu irukka... Will be waiting for the PartII :))
ReplyDelete