Pages

Thursday, April 26, 2012

சுவடு - குளச்சல் (பகுதி 4)


குளச்சல்

[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]

அவன் கண்ண முன்னே, தான் பார்த்த அதே தூண் இருப்பதை கண்டு வியந்தான்.

அவர்கள் வந்த இடம் : குளச்சல். (Colachel)

குளச்சல், கன்னியாகுமரி மாட்டத்தில் உள்ள கடலை ஒட்டிய  ஒரு  ஊர்.

"இங்கதான் விக்ரம், 1741 - ல  திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் டச் (Dutch) கடற்படைக்கும் சண்டை நடந்தது. நம்ம இந்திய சமஸ்தானம் ஒண்ணு, ஒரு ஐரோப்பிய கடற்ப்படையை  தோற்கடிச்ச முதல் போர் இதுதான். இன்னும் சொல்லபோனா ஒரே போரும் இதுதான்"

"என்னடா சொல்ற "

"ஆமா இங்க தான் டச் படை  தோத்து  சரண்டர் ஆனாங்க"
"அப்படியா"
"ஆமா அதில் இறந்த வீரர்களின் நினைவாதான் இந்த தூண். அது மட்டுமில்ல , இந்த வாள்ல இருக்கிற சங்கு சின்னம்தான் இந்த தூணோட உச்சியிலையும் இருக்கு பார். இதுதான் திருவாங்கூர் சமஸ்தானத்தோட சின்னம்."

இருவரும் ஊரை சுற்றி சுற்றி வந்தனர். ஆனால் உருப்படியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வாளுக்கும் அந்த போருக்கும்  நிச்சயம் சம்பந்தம் உண்டு என புரிந்து கொண்டனர்

"விக்ரம், நாம கேள்விப்பட்ட வரைக்கும் சுனாமில கடைசிய தாக்கப்பட்டது இந்த குளச்சல்தான். இந்த வாள்  இங்க எங்கயோ இருந்துதான், கடல் அலைல அங்க வந்துருக்கணும்"
"அவ்ளோ தூரமா"
" ஏண்டா கடலூர்ல செத்தவன விசாகபட்டினத்துல கண்டு புடிக்கலையா..."
"அதெல்லாம் சரி எனக்கேண்ட அந்த காட்சியெல்லாம் வந்தது, அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், இந்த வாள் ஏன் என் கைல கெடைக்கணும்"
"ம்ம்ம்ம்... உன் போன ஜென்ம நியாபகம்... "
"போடா... நானே கொழம்பி போய்  இருக்கேன்... நீ வேற வெளயாடாத..."
"ஆமாடா.. இருக்கலாம்... Short-term memory loss மாதிரி உனக்கு Very Very Long-term memory gain...", என்று சிரித்தான்.
"அப்படியெல்லாம் கூட இருக்கா... "
"ஹே.. நான் சும்மா சொன்னேன்டா...  "
"அதானே... How is it scientifically possible?...
"டேய்.... எல்லாத்துக்கும் Scientific Reason தேடுறதுக்கு வாழ்க்கை ஒண்ணும் Experiment இல்ல"
"அப்போ என்ன சொல்ல வர்ற ... "
"சொல்ல முடியாதுடா.... நீ பார்த்த காட்சி எல்லாம் உண்மையா நடந்ததாகூட  இருக்கலாம் , இதோ இந்தா தூண மாதிரி"

" டேய்... நான் உன்கிட்ட சொல்லாத ஒண்ணு... நான் செத்து போற மாதிரியும் பாத்தேன்"

[பகுதி 5 - வைரவன்
[பகுதி 6 - கரியான்

1 comment:

  1. நல்ல பேஸ்... short term memory loss vs long term memory gain - good thinking ... will read the next episode also ... @sweetsudha1

    ReplyDelete