வைரவன்
[பகுதி 1 - கடல் அலைகள்]
[பகுதி 2 - நினைவலைகள்]
[பகுதி 3 - பயணம் ]
[பகுதி 4 - குளச்சல்]
"இப்போ எங்கடா ஹரி போறோம்"
"திருவாங்கூர் சமஸ்தான தலைநகர் பத்மநாபபுரம் "
"அங்க எதுக்கு""இந்த போர் பற்றி ஏதாவது தகவல் இருக்கான்னு
அங்க ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர் இருக்காரு, அவர்கிட்ட பேட்டின்னு சொல்லி டயம் வாங்கிருக்கேன்"
இருநூறு வருடம்... எனவே மூன்று அல்லது நான்கு தலைமுறை இடைவெளியே.... நிச்சயம் ஏதாவது தகவல் கிடைக்கும் என் நம்பினார்கள்.
பத்மநாபபுரம்.
பல ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய பால நம்பூதிரியை சந்தித்தார்கள்.
பேட்டி என ஆரம்பித்து அவர் எழுதியவைகளை பற்றி சிறிது நேரம் பேசினர். பின்னர்அவர் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் இவர்கள் அந்த வாளை காண்பித்தனர்.
சற்று நேரம் உற்று பார்த்தார். பின்னர் அந்த அறையில் இருந்த அலமாரில் உள்ள சில புத்தகங்களை படித்துவிட்டு மீண்டும் வந்தார்.
"இது சேபர் வகை வாள். உங்களுக்கு எப்படி கிடைச்சது?'
விக்ரமும் ஹரியும் நடந்தவை எல்லாம் கூறினர்.
ஒரு நிமிடம் எனக்கூறி உள்ளே சென்றார்.
சிறிது நேரம் கழித்து சில புத்தங்களுடன் வந்தார்.
" இது குளச்சல் போரில் பயன்படுத்திய வாள்தான். ஆனால் அப்பொழுது இந்த வாள் நமது படையில் ஒருவனிடம் மட்டுமே இருந்தது. அந்த போரில் நமது குதிரை படையை வழிநடத்தி சென்ற வைரவன். மிகப்பெரும் துரோகி. குளச்சல்தான் அவன் சொந்த ஊரும கூட.
நமது படையில் இருந்துகொண்டே, டச் படைக்கு பல தகவல் சொல்லியிருக்கிறான். ஆனால் டச் படை தோற்றதும் எங்கே மாட்டிகொள்வோமோ என எண்ணி தப்பி ஓடிவிட்டான்.
இதோ இந்த சேபர் வாள் கூட ஒரு ஐரோப்பிய தயாரிப்பே.
கடைசி
வரை நமது வீரன் போலவே நடித்திருக்கிறான், டச் படையை கைது செய்து அழைத்து வரும் போது, அவன்
தப்பி ஓடிவிட்டான். இதோ இந்த வரலாற்று புத்தகத்தில் கூட ஒரு குறிப்பு உள்ளது
"
ஆர்வமாய் ஹரி வாங்கி பார்த்தான், ஆனால் விக்ரம் உறைந்து போயிருந்தான், அவன் கண் முன்னே அதே காட்சிகள் ஓடியது ... இப்பொழுது இன்னும் தெளிவாக...
அவன் தீர்க்கமான குரலில் சொன்னான், "அவன கொன்னுட்டான்... கரியான் அவன கொன்னுட்டான்"
"கரியானா?" என்று அதிர்ச்சியானர் பால நம்பூதிரி.
[பகுதி 6 - கரியான்]
[பகுதி 7 - பைரவி]
ஒவ்வொரு பார்ட் என்ட்லையும் எதிர்பார்ப்பு ஆதிகமாகிடே இருக்கு அண்ட் ஆல்சோ ஹிஸ்ட்ரி பத்தி தெரிஞ்சிக்க முடியுது... Nice Way of narrating :))
ReplyDeleteஇது என்ன லேடீஸ் ஸ்பெஷல் தொடரா? : )) ஒன்லி லேடீஸ் கமென்டிங்க் ...
ReplyDelete