Pages

Friday, April 27, 2012

சுவடு - பைரவி (பகுதி 7)

பைரவி

[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]
[பகுதி 4  - குளச்சல்]
[பகுதி 5 - வைரவன்]
[பகுதி 6 - கரியான்]

"டேய் ஹரி என்னடா சொல்ற "
"நெஜமாதாண்டா"
"நடந்தது ஏதும் எனக்கு நியாபகம் இல்ல, அதுக்காக இதெல்லாம் எப்படிடா நம்புறது"
"டேய் விக்ரம், நீ இப்படி ஏதாவது சொல்லுவேன்னு தெரியும், அதான் நான் யாருக்கும் தெரியாம நீ பேசுனத ரெக்கார்ட் பண்ணிட்டேன்."

விக்ரம் அந்த பெரியவரின் குடிலில் பேசிய அனைத்தும் கேட்டு ஆச்சர்யப்பட்டான்.

"இப்பவும் இப்படி எல்லாம் நடக்குதா ஹரி,நம்புற மாதிரியே இல்லையே..."

"நீ வேற, இன்னமும் நம்ம ஊரு போலீஸ்காரங்க கொலைகாரன புடிக்க ஆவி கிட்ட பேசுறாங்க... இங்க இல்ல உலகம் பூர இது நடக்குது ..."

சரி சரி இனி நேரத்த கடத்த வேணாம் , உடனே நாம குளச்சல் போலாம்.
பால நம்பூதியும் சில ஓலை சுவடிகளை எடுத்துகிட்டு அங்க வர்றேன்னு சொல்லிருக்கார்.

"யாருடா இந்த பைரவி? எதுக்காக கரியான் வைரவன கொல்லனும்"
"எல்லாம் அங்க போனா தெரியும்னு நெனைக்கிறேன், உன்ன ஆத்துல குளிச்சிட்டு  கூட்டிட்டு வர சொன்னாரு"

இருவரும் குளச்சல் வந்து சேர்ந்தனர். இவர்கள் வரும் முன்னரே பால நம்பூதிரி, அந்த பெரியவர், மகாதேவர் கோவில் பூசாரி என அனைவரும் அங்கே வந்திருந்தனர்.

ஊரில் உள்ள நிறைய பேர் திரண்டிருந்தனர். 

வைரவன் பற்றி இத்தனை நாள் தவறாக எண்ணியதற்க்காக மக்கள் வருந்தினர். அவன் மீது இருந்த பழியை துடைக்கவே வைரவன் மறு உருவம் கொண்டு வந்ததாய் நம்பினார்.

டீ லானாய், அவருடைய போர் குறிப்பில் வைரவன் என்று யாரும் டச் படைக்கு உதவி செய்யவில்லை என்றே எழுதியிருந்தார்.

அந்த வாள், மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டு, மக்கள் அதனை வணங்கினர்.

வாள், அதற்குரிய இடம் வந்து சேர்ந்து, அதற்கான மரியாதையையும்  பெற்றுகொண்டது.

பால நம்பூதிரி ஓலை சுவடியை  படிக்க ஆரம்பித்தார்....

படிக்க படிக்க விக்ரமின் முகத்தில் சிறிது புன்னகை வந்தது...

அவனுக்கு இப்பொழுது தெளிவாய் எல்லாம் புரிந்திருந்தது...

ஹரிக்கு ஒன்றும் புரியவில்லை...

அதில் ஒரே ஒரு ஓலை மட்டும் விக்ரம் வாங்கிக்கொண்டான்.

படித்து முடித்ததும் கோவிலை விட்டு வெளியே வந்த விக்ரம், அவன் அப்பாவை அழைத்து நடந்தவை அனைத்தையும் சொன்னான்...

அப்படியே பவானியும் அழைத்தான் ...

"சொல்லுங்க விக்ரம்"

மெலிதான புன்னகையுடன் சொன்னான், "பைரவி.....", கையில் அந்த ஓலையுடன்.

[சுவடு - நிறைவு பகுதி ]

1 comment:

  1. கதை நல்லா வந்திருக்கு - ஒரு டவுட்டு - கனவுல தான் சாகிறதைக்கூட பார்க்கிற மாதிரி விக்ரம் சொல்லறாரு - அதுக்கு எதவும் significance இல்லயா?
    சாரி - இப்ப தான் படிச்சேன் ... @ஸ்வீட்சுதா

    ReplyDelete