"இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்டா" என ஆரம்பித்தான் அஜய்.
"தெரியலடா யாரும் கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் காணல" என்றான் கணேஷ்.
"எல்லாம் இவனாலதான்" என்று பாபுவை நோக்கி திட்டினான் ராம்.
"நான் என்ன பண்றது, நாளைக்கு காலைல ஆபிஸ் சீக்கிரம் போகணும். ஹைவேஸ்ல எதோ டேங்கர் லாரி கவுந்துடுச்சு அதனால டிராபிக் ஜாம்-னு நாகா சொன்னதாலதான இந்த ரூட்ல போலாம்னு சொன்னேன். Its not my fault man", என்றான் பாபு.
அவர்கள் முன்னே பரிதாபமாய் அடிபட்டு நின்றிருந்தது அவர்கள் வந்த i20 கார். பாபு, ரமேஷ், கணேஷ், அஜய் ஆகிய நாலு பேரும் வந்த கார்தான் அது.
அவர்கள் முன்னே பரிதாபமாய் அடிபட்டு நின்றிருந்தது அவர்கள் வந்த i20 கார். பாபு, ரமேஷ், கணேஷ், அஜய் ஆகிய நாலு பேரும் வந்த கார்தான் அது.
"என்ன ஒரு 80 ல வந்துருப்பியா" அஜயிடம் கேட்டான் கணேஷ்.
"இல்லைடா 100 பிளஸ்" என்று கெத்தாய் சொன்னான் காரை ஓட்டி வந்த அஜய்.
"ஏண்டா, இதென்ன ஹைவேவா, சிங்கிள் ரோடுதான இந்த ஸ்பீட் வரலாமா", கணேஷ்.
"இத இடிக்கறதுக்கு முன்னாடி சொல்ல வேண்டியதுதான, அப்பெல்லாம் கம்முனுதான வந்த" , அஜய்.
"எப்படிடா இப்படி கொண்டுவந்து இடிச்ச, வண்டி உன் Control-ல இல்லயா", என்றான் ராம்.
"அவனே Control-ல இல்ல, அப்பறம் எங்க வண்டி இருக்கும்" சற்றே கோவமாய் சொன்னான் கணேஷ்.
பெங்களூரில் வேலை செய்யும் இந்த நால்வரும், சென்னையில் நடந்த அவர்கள் கல்லூரி Get together முடித்தி விட்டு திரும்பும் போதுதான் இது நடந்தது. அவர்களுக்கு முன்னே கிளம்பிய நாகாதான், ரோடு ப்ளாக் என்பதை கூறினான். காலையில் கிளம்பலாம் என முடிவு செய்யும் நிலையில்தான் பாபு குப்பம் வழியாக சென்றால் பிரச்சனையை இல்லை என்றான்.
"சரி சரி முடிஞ்சது முடிஞ்சு போச்சு, இதுக்கு போய் ஏன்டா இப்படி..." என்று ராம் சமாதானம் செய்ய வரும் போது தூரத்தில் ஒரு பெண்ணின் அழும் குரல் கேட்டது அவர்களுக்கு.
அஜய் முகம் லேசாக மாறியது .
"டேய் எவனோ வண்டில போய்ட்டுருந்தாண்டா அவன லேசா தட்டிட்டேன், அனேகமா அவுட்டுன்னு நெனைக்கறேன், வாங்கடா போயி பாக்கலாம்..." என்றான் அஜய்.
ஓடி போய் பார்த்தார்கள்....
"அப்பா அப்பா " என அழுது கொண்டிருந்தாள் ரோஜா.
ரோஜா, அந்த மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவள். அவள் தந்தை, சதாசிவம், ஓட்டல் சமையல்காரர். மனைவி இறந்த பின், தன் ஒரே மகளை மருத்துவர் ஆக்க வேண்டும் என்பதே அவர் கனவு.
"என்ன ஆச்சுமா " என்றனர் ...
"எங்கப்பா சார்... மெடிக்கல் காலேஜில சீட் வாங்கிட்டு வந்துக்கிட்டு இருந்தோம் சார்.. ஒரு காரு இடிச்சுட்டு போய்டுச்சு சார்... ரொம்ப சந்தோசமா பேசிகிட்டு வந்தாரு சார்..."
சதாசிவம், தலையில் ரத்தம் வலிய எதோ முனகினார், இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ரோஜாவின் அழுகை மட்டும் கேட்டது.
அதற்குள் சற்றே கூட்டம் கூடியது. அனால் யாரும் உதவவில்லை.
இவர்களுக்கு நடந்தவை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது.
அஜய் வேகமாக வரும்போது ரோஜாவும் அவள் அப்பாவும் வந்த டி.வி.எஸ் வண்டியை இடித்து விட்டான். அதனால் அஜய் தடுமாறி மரத்தில் இவர்கள் வந்த காரை மோதிவிட்டான். நால்வரும் கொஞ்சம் போதையில் இருந்ததால் இப்போதுதான் புரிந்தது.
அஜய் வேகமாக வரும்போது ரோஜாவும் அவள் அப்பாவும் வந்த டி.வி.எஸ் வண்டியை இடித்து விட்டான். அதனால் அஜய் தடுமாறி மரத்தில் இவர்கள் வந்த காரை மோதிவிட்டான். நால்வரும் கொஞ்சம் போதையில் இருந்ததால் இப்போதுதான் புரிந்தது.
கூட்டம் இப்பொழுது கொஞ்சம் பெரிதாய் கூடியது, ஆனால் அமைதியாகே இருந்தது. ஆம்புலன்ஸ் கூட அமைதியாகவே வந்தது.
ரோஜா சொன்னாள், "விதி சார், எங்கப்பாக்கு என்னை சின்ன வயசுல இருந்து டாக்டராக்கனும்னு கனவு. இப்போதான் மெடிகல் காலேஜில அட்மிஷன் பண்ணிட்டு அப்படியே கோவிலுக்கு போய் அந்த லெட்டர வெச்சு சாமி கும்புட்டு வரோம் " என்று கூறிக்கொண்டே பெரிதாய் அழுதாள்...
"இனிமே இவரு யார படிக்க வெப்பாரு ... அதுக்குள்ள இப்படி நான் செத்துபோயிட்டனே அப்பா .... ", என்று குமுறினாள்.
புதருக்கு அருகே அவளின் பிணம் கிடந்தது. போலிஸ் இன்ஸ்பெக்டர், காருக்குள் இருந்த நான்கு சடலங்களையும் பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.
நால்வரும் அவளுக்காக கண்ணீர் வடித்தனர், ஆனால் கண்களில் நீர் வரவில்லை.
ஐவரும் ஆவியாய் மேலே சென்று கொண்டிருந்தனர்.
அந்த அப்பாவி அப்பாவின் கனவும் ஆவியாகி போனது ...
அந்த அப்பாவி அப்பாவின் கனவும் ஆவியாகி போனது ...
"எந்தவொரு விபத்தும் விதி அல்ல"
அருமை....நல்ல முயற்சி....வாழ்த்துக்கள் !!!
ReplyDeleteநன்றி சீனு :)
Deleteஅட்டகாசங்க. கடைசில இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை. அந்த நாலு பேரும் உயிரோட இருக்காங்கனு நினைக்க வச்சு கடைசில இறந்ததாக முடிச்சது அருமை. சிறப்பான கதை :))
ReplyDeleteமிக்க நன்றி, உங்கள் நேரம் ஒதுக்கி படித்ததற்கும், வாழ்த்தியதற்கும் :)
DeleteNice Story Boss :)
ReplyDelete