Pages

Wednesday, April 18, 2012

வலைபாயுதே


“டேய் சித்து “
“எஸ் பாஸ்
“என்னடா, இன்னும் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தரல
“இந்தாங்க “
“என்ன இன்னைக்கு இவ்ளோ சின்னதா இருக்கு  “
“பாருங்க பாஸ்
“என்னடா ரேசிக்னேஷன் லெட்டர் குடுக்கற, யோசிச்சு தான் இந்த முடிவு பண்ணிருக்கியாஏன் திடீர்னு?”


தனது ராஜினமா கடிதம் பார்த்ததும் எமலோகமே அல்லோகலப்படும் என்று எதிர்ப்பார்த்த சித்திரகுப்தனுக்கு, எமன் பெரிதாய் அதிர்ச்சியடையாதது சற்றே ஆச்சர்யமாய் இருந்தது.
சற்று நேர சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சித்து பிடிவாதமாய் இருந்தான் .


“சரிரெண்டு மாசம் நோட்டிஸ் பீரியட் அதுக்குள்ள வேற ஆள் புடிச்சு KT (Knowledge Transfer) குடுத்துடணும்.”
“என்ன பாஸ் இங்க வர்ற நெறைய பேர்ல, யாரையாவது புடிச்சு 
குடுங்க KT குடுத்துட்டு போயிடறேன்
“உனக்கு தெரியாதாஇங்க வர்ற எல்லாரும் ஆயுள் முடிஞ்சவங்க.
ஆயுள் மிச்சம் இருக்கற ஆள்தான் இதுக்கு எலிஜிபில்.
நீ பூலோகம் போயி ஆயுள் மிச்சம் இருக்கற ஆள் கொண்டு வாநீ ஆள் புடிக்க ரெண்டு நாள்தான் டைம்.”
“ஐ ஆன்சைட். ஷார்ட் டெர்ம்தான் இருந்தாலும் பரவல்ல" என மனசுக்குள் எண்ணினான். 
சரி நான் இப்போவே கெளம்புறேன்
ஆல் தி பெஸ்ட்
தேங்க்ஸ் ... கும்தாத்தா... “

மூன்றாம் நொடி சித்திரகுப்தன்  பூலோகம் வந்து சேர்ந்தான்அவன் வந்த இடம் மீண்டும் தமிழகம்.  


பதினேழு வருஷத்துக்கு முன்னாடி இதே ஏப்ரல் மாசம் அந்த புக்க தொலைச்சிட்டு இங்க வந்தது... ம்ம் .. பரவால்ல... வெயில்தான்  இப்போ கொஞ்சம் ஜாஸ்தி. அதோ ஒரு பஸ் போகுது அதுல யாரையாவது புடிச்சிட வேண்டியதுதான்.


பேருந்து ஓட ஓட போய் ஏறினான் .


கண்டக்டர், “யோவ் எரும மாடு மாதிரி வந்து ஏறுற அறிவில்லை...”
"நான் எரும மாடா... மேல வருவல்ல, வா அப்போ எரும மாட விட்டே மிதிக்கவேக்கறேன் " என்று மனதுக்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தான்.
“அங்க ஒருத்தன் இருக்கான், அவன் புடிச்சுடுவோம் , அருகில் போய் அமர்ந்தான்.


“தம்பி
பதில் இல்லைகாதில், காது கேளாதோர் கருவி.
“ஓ... பாவம் என நினைத்தான்
இவன கொண்டு போனா எமன் என்ன மிதிப்பார் 
வேறு யார் சிக்குவார் என நோட்டமிட்டான்.
அதற்குள் கண்டக்டர் 'டிக்கெட்' என வந்தார். சித்து கடைசி ஸ்டாப்க்கு டிக்கட் வாங்கினான்.
அருகில் இருந்தவனிடம் கேட்டபோதுகாதில் இருந்த ஹெட்போனை கழற்றி விட்டு டிக்கட் வாங்கிக்கொண்டான்.
“தம்பி உங்களுக்கு காது கேக்குமா 
மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நல்லாவே
“அப்போ இது 
“ஐபாட் “
“என்னது...
“ம்ம்ம்... பாட்டு கேக்குறது “
“ஓ சரி சரி என்று தன் கதையை கூறி, “மேலோகம் வரியா என் கேட்டான். 
அவனோ இரண்டு நொடி சித்துவையே பார்த்துவிட்டு, காதில் மீண்டும் தனது ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஜன்னல் பாக்கம் திரும்பிக்கொண்டான்.
"திமுரா.. இரு..இரு.." என் மனதுக்கும் திட்டம் தீட்டினான்.
"இவன் இறங்கரப்போ கீழ தள்ளி கொன்னுட வேண்டியதுதான்"    


அவன் இறங்கும் போது சித்துவும் பின்னாடியே சென்றான்.
சரியான சமயம் பார்த்து தள்ளி விட்டான்அனால் அதற்குள் பேருந்து  நின்றுவிட்டது, அவன் சும்மா கீழே விழுந்தான்
எழுந்து வந்தவன் சித்து கன்னத்தில் ‘பளார் அறை விட்டு , ஏதோ ஆங்கிலத்தில் திட்டி விட்டு போய்விட்டான்.


சோகமாய் கன்னத்தில் கை வைத்து சித்து நின்றிருந்தபோது, அசால்ட்டை அசத்தல் கெட்-அப்பில் வந்தார், எமதர்மராஜன்.
"பாஸ், நீங்க எங்க இங்க.."
"உன்ன பத்தி தெரியும், நீ இப்படித்தான் பண்ணுவேன்னு, அதான் நானே வந்தேன்.
அவன நீ என்ன MNC கம்பெனிலயா வேலைக்கு கூப்புடுற, ஜாப் டிஸ்க்ரிப்ஷன் எல்லாம் சொல்லிக்கிட்டு... பிளான் போட்டமா ஆள தூக்குனமான்னு போயிட்டே இருக்கணும்"


அப்பொழுது கார்த்திக் தனது புது பைக்கில் இவர்களை கிராஸ் செய்தான்.
எமன் ஒரு நிமிடம் கண் மூடி எதோ யோசித்துவிட்டு..  “சரி, இவன்தான் நம்ம டார்கெட் “ என்று கார்த்திக்கை காட்டினார்.
சித்துவை அருகில் அழைத்து தனது பிளானை சொன்னார்.
“டேய், அந்த ப்ராஜாக்ட் கூட இவனையும் கோர்க்க டிரை பண்ணுவோம்சிக்குனா தூக்கிடுவோம்.”
“Ok  பாஸ்


கார்த்க்கு சிக்னலை நெருங்க நெருங்க, பச்சை ஆரஞ்சாகி சிகப்பாய் மாறியது. இவன் கோட்டை தாண்டாமல் நிறுத்தினான்.
சிக்னல் கௌன்ட்டர் எண் 30-ல் தொடங்கி குறைந்து கொண்டே வந்தது.
அப்பொழுது இரண்டு இளைஞர்கள் புத்தம் புதுசாய் இரண்டு பைக்கில் அருகில் வந்து நின்றனர்.
சிக்னல்  கௌன்ட்டர் இப்பொழுது 20
கார்த்திக்கை பார்த்து நக்கலாய் சிரித்துவிட்டு, இருவர் பைக்கும் சீறி பாய்ந்தது.
சிக்னல் கௌன்ட்டர்  இப்பொழுது 15
கார்த்திக், "நான் மட்டும் நிக்கறதுக்கு என்ன லூசா", பர்ஸ்ட் கியர் மாத்தி அவனும் பறந்தான்.

அடுத்த 15-வது நொடி, அந்த சாலையில் காரும் பேருந்தும் மோத, கார்த்திக்கும் அவன் பைக்கும் அதிலே சிக்கி கொண்டது .
இப்பொழுது விபத்திலே இறந்த 6  பேரில் கார்த்திக்கும் ஒருவன்.

கார்த்திக்கை தூக்கிகொண்டு செல்லும்போது, சித்திரகுப்தன், "தம்பி, பச்சை விழுற வரைக்கும் நின்னுருந்தா நீ தப்பிச்சுருப்ப... 
எங்க வலையி விழுந்துட்டியே..."

“சாலை விதிகளை மதிப்போம், சிக்னலில் சிரிப்பது சித்திரகுப்தனாகவும் இருக்கலாம் “ 

2 comments: