Pages

Friday, April 27, 2012

சுவடு - நிறைவு பகுதி


[பகுதி 1  - கடல் அலைகள்]
[பகுதி 2  - நினைவலைகள்]
[பகுதி 3  - பயணம் ]
[பகுதி 4  - குளச்சல்]
[பகுதி 5 - வைரவன்]
[பகுதி 6 - கரியான்]
[பகுதி 7 - பைரவி]   


அடுத்த நாள் ...

மகாதேவர் கோவில் முன்பு...

"என்ன விக்ரம் சொல்றீங்க, நான்தான் பைரவியா.... நாம போன ஜென்மம் இங்க இருந்தோமா"

"ஆமா பவானி, நீதான் பைரவி. உங்க அப்பா உன்னை எனக்கு திருமணம் செய்து தர முடிவு பண்ணினார். அது பிடிக்காத உன் மாமன் கரியான் உன்னை அடைய என்ன கொலை பண்ணிட்டான். கொன்னு கடலில் போட்டுட்டான்.

ஆனால் ஊர் முழுக்க தப்பி ஓடிட்டேன்னு பொய்ய  பரப்பிட்டான்.

ஊரே வைரவன பத்தி ... ம்ம்ம்... என்னை  பத்தி தப்பா பேச, அந்த அவமானம் தாங்க முடியாத  உங்கப்பாவும்  என்னை பிரிஞ்ச சோகத்துல நீயும் இதோ இதே கோவில் வாசல்லதான் உங்க உயிரை விட்டுட்டீங்க.

ஆனால் ரெண்டே நாள்ல கரியானும் தற்கொலை பண்ணிகிட்டான். உங்கள பிரிஞ்ச சோகத்துல அவன் செத்துட்டான்னு இந்த ஊர் நம்புச்சு.
ஆனா உன்னை சின்ன வயசுலருந்து காதலிச்சு, கல்யாணம் பண்ண முடியலைன்னும்,  உன் சாவுக்கு அவனே காரணம்னு உறுத்த, அவனும் உயிரை விட்டுட்டான். அந்த உண்மை யாருக்கும் தெரியல. "

"இதெல்லாம் எப்படி தெரிஞ்சது"

"பைரவியோட அப்பா பெரிய மருத்துவர், அவரோட வாழ்க்கை குறிப்பு இருந்த ஓலை சுவடிலதான் இந்த விஷயம் இருந்தது"  

"சரி ஆனா உங்களுக்கு முன் ஜென்ம நினைவு வந்துச்சு... கத்தி உங்க கைக்கே  வந்துச்சு.... அதனால நீங்க வைரவன் சரி... ஆனா நான்தான் பைரவினு எப்படி சொல்றீங்க "
"சொல்லப்போனா ... நீதான்  முதல்ல கடற்கரையில வைரவன் செத்து இருக்கறத பாத்த.... அதாவது என்னோட உருவத்துல... உனக்கு நியாபகம் இருக்கா... உன் கனவுல வந்ததா நீ கூட போன் பண்ணி சொன்னியே.. அன்னிக்கு நைட்டேதான் எனக்கு அந்த வாள் கெடச்சது.

அது மட்டும் இல்ல, நம்ம கல்யணம் என்னைக்கு Fix பண்ணிருக்காங்க?"

"பிப்ரவரி 18"

"தமிழ் தேதி..."

"மாசி 7"

"ம்ம்ம்ம்... இதே மாசி 7 -தான் வைரவனுக்கும்  பைரவிக்கும் கல்யாணம் Fix பண்ணிருக்காங்க. ஆனா போர் வர்றா மாதிரி இருக்குன்னு சொல்லி கரியான் கல்யாணத்த தள்ளி வெக்க சொல்லிட்டான். வைரவனும் சரிதான்னு ஒத்துக்கிட்டான்.

பைரவிக்ககா அவன் வாங்கிருந்தா தாலி கூட அந்த வாளோட சேர்த்து கட்டி வெச்சுருந்தான்."

"ஓ.. ஈஸ் இட் ... ஆனா.... என்னங்க இது தேதி ஒண்ணுன்னா ஆளும் ஒண்ணா  இருக்க முடியுமா "

"ஆளும் ஒண்ணுதான், இத பாரு புரியும்..."

அவள் கைகளில் அந்த ஓலையை கொடுத்தான்...

அதை அவள் படித்தால்... அதில் எழுதியிருந்தது....
"பைரவி - ஊரே அவள் கையால் மருந்து வாங்கினால் நிச்சயமா குணம் அடைவோம் என நம்பியது . 
அதிர்ஷ்டக்காரி, அரிதாய் காணக்கூடிய அதிர்ஷ்ட மச்சத்தை அவள் கை விரல்களிடையே கொண்டிருந்தாள்"

அதே சுவடு அவள் விரல்களில்....

"சரி வந்த வேலை முடிஞ்சது வாங்க போகலாம்  .... " என  இருவரையும் அழைத்தான் ஹரி.

எல்லா உண்மைகளும் அனைவருக்கும் புரிந்தது.

ஆனால் யாருக்குமே தெரியாத உண்மை, வைரவன் பைரவி சாவுக்கு காரணமான  கரியான்தான் இந்த ஹரி என்று !!!

மறுஜென்மத்தில் பலி வாங்க வேண்டும் என்றில்லை பரிகாரமும் செய்யலாம் 

  *******************************************************************

1 comment:

  1. good ending - nice finishing touch "மறுஜென்மத்தில் பலி வாங்க வேண்டும் என்றில்லை பரிகாரமும் செய்யலாம்" @sweetsudha1

    ReplyDelete